ஜெ சொத்து முடக்கம்-வழக்கை விசாரிக்க தடை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து முடக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்கசென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு தல் 1996ம் ஆண்டு வரை வருமானத்திற்கும் அதிகமாக ரூ.69.6 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான வழக்குபெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக கடந்த 1997ம் ஆண்டு 11 நிறுவனங்களின் (இதில் ஜெ, சசிமற்றும் அவர்களது ஆட்களின் முதலீடு உள்ளது) சொத்துக்களை முடக்க சென்னைசிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவை அனைத்தும் அசையாச் சொத்துக்கள்ஆகும்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா மற்றும் 5 நிறுவனங்கள் சார்பில்சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில்இருக்கும்போது இந்த மனுக்களை விசாரிக்க சிறு வழக்குகள் நீதிமன்றத்திற்குஅதிகாரம் கிடையாது, எனவே வழக்கை விசாரிக்கக் கூடாது என்று கோரி திமுகபொதுச் செயலாளர் அன்பழகன் சிறு வழக்குகள் நீதிமன்றத்திலும், சென்னைஉயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயபால், சிறு வழக்குகள்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்களை விசாரிக்க தடை விதித்தார்.
அதற்கான அதிகாரம் சிறு வழக்குகள் நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் அவர் தனதுதீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
-
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications