என் குரல் சத்தியத்தின் குரல்-சொல்லும் வைகோ
நாகர்கோவில்:
என் பேச்சில் சத்தியத்தின் குரல் இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நாகர்கோவிலில் பிரச்சாரக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:தமிழகத்தில் 5 வருடமாக எம்எல்ஏவாக இருந்த கருணாநிதி ஒரு நாள் கூட சட்டசபைக்குப் போகவில்லை.ஆனால், தமிழகத்தில் நடக்கும் மத்திய அரசு விழாக்களில் கருணாநிதி எந்த வகையில் கலந்து கொள்கிறார்?.
பெரிய பெரிய ஜாம்பவான்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் முதல்வர், புரட்சித் தவைவி விரல் நுனியில்பதில் சொல்கிறார். அதற்கு பயந்த தான் கருணாநிதி சட்டசபைக்கே போகவில்லை.
அவரது புத்திரரர் ஸ்டாலின் சட்டசபைக்கு போவதும் தெரியாது, வருவதும் தெரியாது.
கூட்டணியில் இருக்கும்போது மதிமுக எம்பிக்களை அடகு வைத்துத் தான் மந்திரி பதவிகளை வாங்கினார்கருணாநிதி. இது இந்திய அரசியலில் யாரும் செய்யாத மோசடி. கருணாநிதியின் இந்த துரோகத்தைப் பார்த்துஎன் தொண்டர்கள் துடித்துப் போனார்கள்.
22 சீட் தான் தருவோம், கூட்டணியில் இருந்தால் இரு.. இல்லாவிட்டால் போ என்றார். நான் என்னகொத்தடிமையா?
நான் பெரிய பேச்சாளன் என்று நினைத்து நீங்கள் இங்கு வரவில்லை. வைகோவின் பேச்சில் சத்தியத்தின் குரல்இருக்கும் என்று நினைத்து தான் என் பேச்சைக் கேட்க வந்திருக்கிறீர்கள்.
எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியான நாள் 1977ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி.இப்போதும் மே 11ம் தேதி வருகிறது. அந்த நாள் தமிழகத்துக்கு தீர்ப்பு வாசிக்கப்படும் நாள். (அடடா, என்னஒரு இன்பர்மேட்டிவான எடுத்துக் காட்டு).
கருணாநிதி பெயரைக் கேட்டால் மக்களுக்கு பஞ்சம் தான் நினைவுக்கு வரும். புயல் வந்தபோது அமெரிக்காவேநிவாரணம் வழங்க முடியாமல் தவித்தது. ஆனால், தமிழகத்தில் இந்தப் புண்ணியவதி வெள்ளத்தை எவ்வளவுஅழகாக சமாளித்தார்.
மீண்டும் இந்தப் புண்ணியவதியின் ஆட்சி தொடர வேண்டும்.
இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கேரளாவில் கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் கட்டிஉருள்கிறார்கள், சண்டை போடுகிறார்கள். ஆனால், இங்கே ஒரே கூட்டணியாம். கட்டிப் பிடித்து நிற்கிறார்கள்.இவர்களது சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு அளவில்லையா?
மெட்ராஸ் ஏர்போட்டையே வாங்க கருணாநிதி குடும்பத்தினர் முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் தமிழ்நாட்டைஒப்படைத்தால் என்னாகும் என்றார் வைகோ.
-
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications