கேபிள் இணைப்புடன் டிவி தருவோம்: ஸ்டாலின்
உடுமலைப்பேட்டை:
திமுக ஆட்சிக்கு வந்தால் வெறும் கலர் டிவியை மட்டும் தர மாட்டோம், கூடவேகேபிள் இணைப்பும் கொடுப்போம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் கூறியுள்ளார்.
உடுமலைப்பேட்டையில் நடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன் என்று ஜெயலிதாகூறினார். ஆனால் எதில் எல்லாம் தமிழகம் இப்போது முதலிடத்தில் உள்ளதுதெரியுமா? நீதிமன்றக் கண்டனத்தைப் பெறுவதில் முதலிடம், டாஸ்மாக் மதுவிற்பனையில் முதலிடம், ஊழலில் முதலிடம், அரசு இடங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதில் முதலிடம் என ஏகப்பட்ட முக்கியமான விஷயங்களில் தமிழகத்தைமுதலிடத்திற்குக் கொண்டு வந்துள்ளார் ஜெயலலிதா.
2 ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், கூட்டுறவு கடன்தள்ளுபடி ஆகிய அறிவிப்புகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
வெறும் டிவி மட்டும்தானா கேபிள் இணைப்பு கிடையாதா என்று கேட்கிறார்கள். டிவிமட்டும் தர மாட்டோம், கேபிள் இணைப்பும் சேர்த்தே கொடுப்போம். இதெல்லாம்சாத்தியமா என்று ஏகடியம் பேசுகிறார்கள்.
ஜெயலலிதா, சசிகலா கும்பல் அடித்து வரும் கொள்ளையைத் தடுத்து நிறுத்தினால்எல்லாமே சாத்தியம்தான் என்றார் ஸ்டாலின்.
ரூ.100 கோடி சைக்கிள் ஊழல்:
முன்னதாக பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் நடந்த திமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,
இது சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையிலான போர். கடந்த ஐந்து ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும்பாதிக்கப்பட்டார்கள்.
அரசு ஊழியர்கள், சலுகைகளை கேட்டார்கள், கிடைத்தது என்னவோ எஸ்மா, டெஸ்மா வழக்குகள்தான்.
ஒரே கையெழுத்தில் ஒன்றே முக்கால் லட்சம் அரசு ஊழியர்களை நீக்கினார் ஜெயலலிதா, 10,000க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் வீட்டுக்குஅனுப்பப்பட்டனர். 72 சாலைப் பணியாளர்கள் வறுமையால் தற்கொலை செய்துகொண்டனர்.
ஒரு தீவிரவாதியைப் பிடிப்பது போல திமுக தலைவர் கருணாநிதியை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து இழுத்துச் சென்றனர்.
அதிமுக அரசின் இலவச சைக்கிள் திட்டம் நல்ல திட்டம்தான். அதற்கு பணம் தந்தது மத்திய அரசு.
ஆனால் அந்தத் திட்டத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளார்கள் அதிமுக ஆட்சியினர் என்றார் ஸ்டாலின்.
-
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின்












Click it and Unblock the Notifications