கோவையில் அத்வானி பிரசாரம்-தீவிர பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
பாஜக தலைவர் எல்.கே.அத்வானி வரும் 30ம் தேதி கோவையில் பிரசாரம்செய்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
30ம் தேதி சென்னை வரும் அத்வானி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவைவருகிறார். மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெறும் பாஜகபொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். பாஜகவேட்பாளர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவுகோவையிலேயே தங்கும் அத்வானி, மறுநாள் காலை திருச்சி செல்கிறார்.
அத்வானி வருகையையொட்டி கோவை, திருச்சியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications