ஹிட்லரை தோற்கடித்த ஜெயலலிதா: அன்புமணி
புவனிகிரி:
தமிழகத்துக்கு மத்திய அரசு கொண்டு வரும் எல்லா நல்ல திட்டங்களையும் தடுத்தவர் ஜெயலலிதா என மத்தியநலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்
சேத்தியாதோப்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அன்புமணி கூறுகையில்,தமிழ்நாட்டை ஆண்ட ஜெயலலிதாவிடம் ஹிட்லர் தோற்றுப் போனார். இப்போது 10 கிலோ அரிசி ஓசிஎன்கிறார். தஞ்சாவூரிலேயே விவசாயி எலிக்கறி சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளானானே? அப்போது ஏன் 10கிலோ அரிசியை இலவசமாகத் தரவில்லை?
ஜெயலலிதாவின் செயல்கள் அத்தனையும் நாடகம். சொல்வார்... எதையும் தர மாட்டார். இன்று சொன்னதைநாளை மாற்றிக் கொள்வார். ஆட்சியைப் பிடிக்கும் வரை ஒரு பேச்சு, தோரணை. ஆட்சியில் அமர்ந்துவிட்டால்வேறு பேச்சு, ஆணவ தோரணை. இது தான் ஜெயலலிதா.
மத்திய அரசு தமிழகத்துக்கு கொண்டு வரும் எல்லா நல்ல திட்டங்களையும் தடுத்தவர் ஜெயலலிதா. உச்சகட்டமாகதமிழர்களின் 100 ஆண்டு கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தையே எதிர்த்தார். இவரெல்லாம்முதல்வராக இருக்கலாமா?
மாநிலத்திலும் நம் ஆட்சி அமைந்தால் தமிழகத்துக்கு திட்டங்களை அள்ளிக் கொண்டு வந்து தருவோம். தரமுடியும் என்றார்.
வைகோ ஒரு வெகுளி: தயாநிதி
திருவள்ளூரில் திமுக கூட்டத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி பேசுகையில்,
வைகோ ஒரு வெகுளி. மைக் முன் வந்தால் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேச ஆரம்பித்துவிட்டார்.ஒரு மைக் முன் நின்று ஜெயலலிதாவைப் பார்த்து கொடுங்கோல் ஆட்சி, கொள்ளைக்காரி, கொலைகாரி என்றார்.இன்னொரு மேடை, இன்னொரு மைக் கிடைத்தவுடன். புண்ணியவதிக்கு ஓட்டு போடுங்கோ.. என்கிறார்.திமுகவில் இருந்தபோது ஹீரோவாக இருந்தவர், இப்போது பரிணாம வளர்ச்சி அடைந்து, வில்லன், காமெடியன்என்று உருமாறி இப்போது ஜீரோ ஆகி நிற்கிறார்.
வைகோ என்னைப் பார்த்து ஆம்பளையா? கேஸ் போடு என்றார். கேஸ் போட்டாச்சு.
தமிழ், இலக்கியம் எல்லாம் பேசும் வைகோவே, கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும்என்று ஜெயலலிதாவிடம் சொல்லும் தைரியம், யோக்கியதை உங்களுக்கு உண்டா?
தமிழகத்துக்கு நலன் பயக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை ஏனம்மா எதிர்க்கிறீர்கள் என்று ஜெயலலிதாவைப்பார்த்து கேள்வி கேட்க உன்னால் முடியுமா?
துரோகம் செய்த வைகோவுக்கு இப்போது அந்தத் துணிச்சல் எல்லாம் போய்விட்டது. அவரால் அவரதுகட்சிக்கும் பயனில்லை, கூட்டணிக்கும் பயனில்லை. ஏன் அவருக்கே பயனில்லை என்றார் தயாநிதி.












Click it and Unblock the Notifications