அற்புதங்கள் செய்ய காத்திருக்கிறேன்: ஜெ

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என திமுகதனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவும்கடன்களை ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

முதலில் திமுகவின் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசியை விமர்சித்த ஜெயலலிதா, பின்னர்10 கிலோ அரிசி இலவசம் என்று அறிவித்தார்.

இந் நிலையில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் ஜெயலலிதா தீவிரபிரசாரம் மேற்கொண்டார். திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாளாடி என்ற இடத்தில்அவர் பேசுகையில்,

கடந்த 2001ம் ஆண்டு முதல் தற்போது வரை விவசாய கடன் வட்டி தள்ளுபடி,அபராத வட்டித் தள்ளுபடி, வட்டிக் குறைப்பு, கடன் மாற்றியமைத்தல் ஆகியவகைகளில் ரூ. 1,160 கோடி வரை தள்ளுபடி செய்தோம்.

வெள்ள நிவாரணம் தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மனுவிலும்விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்யக் கோரினோம்.

ஆனால் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசு இக்கோரிக்கைக்குசெவி சாய்க்கவில்லை.

கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்என் நபார்டு வங்கி வலியுறுத்தியபோதும் அவ்வாறு செய்யாமல் விவசாயக் கடன்மீதான வட்டியைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டேன்.

இந்தத் தள்ளுபடிக்கு ரிசர்வ் வங்கி ஆட்சேபம் தெரிவித்த போதும், அதிமுக அரசால்இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கடனை ரத்து செய்தால் கூட்டுறவு வங்கிகளுக்கு மறு நிதி வழங்குவதைநபார்டு வங்கி நிறுத்தி விடும்.

இதனால் கூட்டுறவு நிறுவனங்கள் முடங்கிப் போகும் நிலை ஏற்படும். எனினும்அதிமுக அரசு விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்து விவசாயிகள்வாழ்வில் ஒளியேற்றுவது என்ற லட்சியத்தில் முனைப்பாக உள்ளது இவை தவிர மேலும்பல அற்புதத் திட்டங்களை அமலாக்கக் காத்திருக்கிறேன் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+