உசிலம்பட்டியில் கார்த்திக் கலக்கல் பிரச்சாரம்
உசிலம்பட்டி:
அதிமுகவின் பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் உசிலம்பட்டியில் சிங்கம் சின்னம் முடக்கப்பட்டுவிட்டதுஎன கார்த்திக் கூறினார்.
உசிலம்பட்டியில் பார்வர்ட் பிளாக் வேட்பாளர் முத்தையா பசும்பொன்னை ஆதரித்து கார்த்திக் பிரச்சாரம்செய்தார். வேனில் நின்றபடி கார்த்திக் பேசியதாவது:
நமது தலைவர் உருவாக்கிய சின்னம் சிங்கம். அதை சதி செய்து இந்தத் தொகுதியில் முடக்கிவிட்டார்கள்.அவர்கள் யார் என்பது உங்களுக்குகெல்லாம் தெரியும் (கூட்டத்தின் அதிமுக, அதிமுக என குரல் கொடுத்தனர்)
![]() |
சின்னம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் எப்போதும் சிங்கம் தான். அவர்களது (அதிமுக) பண பலத்தாலும்,அதிகார பலத்தாலும் சிங்கம் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது.
இதனால் உசிலம்பட்டியில் மட்டும் நமது கட்சி அரிவாள் சின்னத்தில் போட்டியிடுகிறது. அரிவாள் என்றதும் அதுவெட்டுவதற்கான ஆயுதம் மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள்.
அது அறிவு ஆள். அறிவுள்ள ஆள் என்று அர்த்தம். அரிவாளைப் பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு சிங்கம்சின்னம் தான் மனக் கண்ணில் தெரிய வேண்டும் என்றார் கார்த்திக்.
கார்த்திக் பிரச்சாரம் செய்த கிராமப் பகுதிகளில் ஏராளமான பெண்களும், முக்குலத்தோர் சமூகத்து இளைஞர்கள்கூடி நின்று அவரது பேச்சைக் கேட்டனர். அவரது பிரச்சாரத்தால் அப் பகுதியே களைகட்டியது.
அவரது வேன் சென்ற வழியெங்கும் ஏராளமானவர்கள் கூடி நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
கார்த்திக்கின் பாதுகாப்புக்கு சினிமா ஸ்டண்ட் நடிகர்கள் குழுவும் உடன் வந்தது.
தான் சென்ற கிராமங்களில் எல்லாம் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு கார்த்திக் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார்.













Click it and Unblock the Notifications