அமைச்சரை திருப்பி விரட்டிய கிராம மக்கள்
பல்லடம்:
பல்லடத்தில் ஓட்டு கேட்கச் சென்ற அமைச்சர் தாமோதரனை கிராம மக்கள் தடுத்து திருப்பி அனுப்பினர்.
பொங்கலூர் தொகுதியில் உள்ளது ராமலிங்கபுரம் கிராமம். இங்கு சாலை வசதி இல்லாததால் தேர்தல்புறக்கணிப்பில் ஈடுபட கிராம மக்கள் முடிவு செய்தனர்.இந் நிலையில் அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான தாமோதரன் இந்தப் பகுதிக்கு ஓட்டு கேட்கச் சென்றார்.அமைச்சர் வருகிறார் என்றதும் கிராம மக்கள் திரண்டனர்.
அமைச்சரை கிராமத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். அவருக்கு எதிராகவும் கோஷம் போட்டனர். பதிலுக்குஅதிமுகவினரும் கோஷமிடவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவினரை அடக்கிய அமைச்சர் கிராம மக்களிடம் கெஞ்சும் குரலில் பேசினார். சீக்கிரமே ரோடு போடஏற்பாடு செய்றேன். இந்த முறை மட்டும் ஓட்டு போடுங்க என்றார்.
இதைக் கேட்டு ஊர்ப் பிரமுகர்கள் சமாதானம் அடைந்தவர்களாக அமைச்சரிடம் பேசினர். ஆனால்,ஆத்திரமடைந்த பொது மக்கள் ஊர் பிரமுகர்களையும் திட்டிவிட்டு அமைச்சரையும் ஊருக்குள்ள வந்துறாதீங்கஎன்று எச்சரித்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
இதையடுத்து அமைச்சர் வந்த வழியே திரும்பினார்.












Click it and Unblock the Notifications