ஜெ வருகை: கிருஷ்ணசாமிக்கு நோ-பர்மிஷன்
திருச்சி:
பிரதமர் மன்மோகன் சிங் வரும் மே 4ம் தேதி சென்னை மற்றும் திருச்சியில் தேர்தல்பிரசார பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
திருச்சியில் இன்று காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம்பேசுகையில்,பிரதமர் மன்மோகன் சிங் 4ம் தேதி வருவதாக சொல்லியிருக்கிறார். முதலில்திருச்சியில் பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் பின்னர் சென்னையிலும் பேசவுள்ளார்.
நாளை பிரதமரின் சிறப்பு அதிரடிப்படை பாதுகாவலர்கள் தமிழகம் வருகின்றனர்.அவர்கள் வந்து பிரதமர் பேசப் போகும் பிரசாரக் கூட்டங்களின் இடங்கள் குறித்துஆய்வு மேற்கொண்ட பின்னர் பிரதமரின் சுற்றுப்பயண விவரம் அதிகாரப்பூர்வமாகவெளியிடப்படும்.
நான் நேற்று ஸ்ரீரங்கத்தில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், முதல்வர்வருகிறார் என்று கூறி எனது கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. இது கடும்கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் அதிமுக அரசுக்கு எதிரான அலை அபாரமாக வீசி வருகிறது. எனவேவருகிற தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு சிறப்பான ஆதரவுகிடைக்கும் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications