தேமுதிக பெண் வேட்பாளருக்கு கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
கபிலர்மலை தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழக பெண் வேட்பாளர்செல்விக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து தனக்கு பாதுகாப்பு கோரிதேர்தல் அதிகாரியிடம் செல்வி புகார் கொடுத்துள்ளார்.
கபிலர்மலை தொகுதியில் விஜயகாந்த் கட்சி சார்பில் போட்டியிடுபவர் செல்வி.இவரது வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர், இனிமேல்தொகுதிப் பக்கமே வரக் கூடாது. தேர்தலில் போட்டியிடக் கூடாது. மீறினால்துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளார்.இதனால் பயந்து போன செல்வி உடனடிாயக கபிலர்மலை தொகுதி தேர்தல் அதிகாரிஜெயப்பிரகாஷிடம் புகார் கொடுத்துள்ளார். தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்என்றும் அவர் கோரியுள்ளார்.
கார்த்திக் கட்சியின் வேட்பாளர்களுக்கு அதிமுகவினர் மிரட்டல் விட்டு வருவதும்,விஜய்காந்த் கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கவும், பணியாவிட்டால்மிரட்டியும் வருவதும் நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications