எஸ்.சி.வி மிரட்டுகிறது: விண் டிவி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவுக்கு ஆதரவாக செயல்படாவிட்டால் ஒளிபரப்பை முழுமையாகத் துண்டித்துவிடுவோம் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்குச் சொந்தமான சுமங்கலிகேபிள் விஷன் நிறுவனம் தங்களை மிரட்டி வருவதாக விண் டிவி நிர்வாக இயக்குனர்தேவநாதன் கூறியுள்ளார்.

அதிமுக ஆதரவாளரான தேவநாதன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,திமுக கூட்டணிக்கு ஆதரவாக இல்லாதபட்சத்தில் விண் டிவி ஒளிபரப்புநிறுத்தப்படும் என்று பல காலமாக நாங்கள் அச்சுறுத்தப்பட்டு வருகிறோம்.

சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் கேபிள்இணைப்புகளைக் கொடுப்பதில் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சுமங்கலிகேபிள் விஷன் நிறுவனம்தான் ஏகாதிபத்தியமாக செயல்பட்டு வருகிறது.

இதில் சென்னை, நெல்லையில் மட்டும் விண் டிவியின் வீச்சை குறைத்து விட்டார்கள்.மற்ற நகரங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாகவே முழுமையாக இருட்டடிப்பு செய்துவந்துள்ளனர்.

வருகிற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ழுமையான ஆதரவு தர வேண்டும்.இல்லாவிட்டால் மற்ற நகரங்களிலும் ஒளிபரப்பை நிறுத்தி விடுவோம் என்றுஅவர்கள் மிரட்டி வருகிறார்கள்.

ஆனால் இதற்குப் பணிய நாங்கள் மறுத்து விட்டோம். இதனால் கடந்த 23ம்தேதியிலிருந்து நெல்லை மண்டலத்தில் விண் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டது.

இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் நகரங்களில் விண் டிவிதெரியவில்லை.

மாறன் சகோதரர்கள் தொலைக்காட்சியை நடத்தி வருகிறார்கள். எனவே தயாநிதிமாறன் தொலைக்காட்சி ஒளிபரப்புத் துறையை (அது தொலைக்காட்சித் துறை அல்ல,தொலைத் தொடர்புத்துறை.. இதை தேவநாதன் உல்டா செய்து கூறினார்) தன் கையில்வைத்திருப்பதால் பலரையும் மிரட்டி, அச்சுறுத்தி வருகிறார்.

இதனால் அத்துறையை அவரிடமிருந்து பறிக்க வேண்டும் என்றார் தேவநாதன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+