சுயேச்சை வேட்பாளருக்கு துடைப்பக்கட்டை அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன் பகையை மனதில் வைத்து, தனது தேர்தல் பிரசாரத்தின்போது குடும்பப்பெண்ணை தாறுமாறாக விமர்சித்துப் பிரசாரம் செய்த சுயேச்சை வேட்பாளர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பூங்கா நகர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுபவர் நாகராஜன். இவர் காந்திகாமராஜர்மூப்பனார் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவரும் ஆவார். ஒருஆட்டோவை வாடகைக்குப் பிடித்து அதில் தொகுதி முழுவதும் சுற்றி வந்து பிரசாரம்செய்கிறார் நாகராஜன்.

கேசவபிள்ளை பார்க் குடியிருப்பு என்ற இடத்தில் பிரசாரம் செய்த நாகராஜன்,அப்பகுதியில் குடியிருக்கும் ரமணி (வயது 25) என்ற பெண்ணை கடுமையாகவிமர்சித்து பேசத் தொடங்கினார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

இதையடுத்து ரமணியும், அவரது கணவரும், மற்றும் அப்பகுதியில் வசிப்போரும்நாகராஜனுடன் வாக்குவாதம் செய்தனர்.

அடி விழும் சூழல் ஏற்பட்டதைடுத்து நாகராஜன் அங்கிருந்து தப்பி ஓடினார். தப்பிஓடிய அவருக்கு துடைப்பக் கட்டை அடி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. பதிலுக்கு நாகராஜனும் தன்னைவிளக்குமாறால் ரமணி அடித்ததாக புகார் கொடுத்தார். ரமணி தன்னைத் தாக்கியதாகஅவர் குறிப்பிட்டிருந்தார்.

இரு புகார்களையும் பெற்ற போலீஸார் இருவர் மீதும் தனித்தனியாக வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

முன் பகை காரணமாக நாகராஜன் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+