காங் கலாட்டா-கிருஷ்ணசாமி மகனுக்கு கல்தா
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், இளைஞர் காங்கிரஸ்தலைவருமான விஷ்ணு பிரசாத் திடீரென அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்குப் பதிலாக ஜெயக்குமார் என்பவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து ஜெயக்குமாரை எதிர்த்து விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்கள்சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து வாசன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில்கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டார். இதற்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
காரணம் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் இளைஞர் காங்கிரஸ் தலைவராகஇருந்து வந்ததால். இதையடுத்து விரைவில் விஷ்ணு பிரசாத் மாற்றப்படுவார்காங்கிரஸ் மேலிடத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் விஷ்ணு பிரசாத் இன்று மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் மயூராஜெயக்குமார் என்பவர் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இதற்கு விஷ்ணு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சத்தியமூர்த்தி பவனில் இன்றுகாலை கூடிய ஜெயக்குமார் எதிர்ப்பாளர்கள் நியமன அறிக்கையை தீ வைத்துஎரித்தனர். அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் கிழித்தெறிந்தனர்.












Click it and Unblock the Notifications