தமிழக தேர்தலில் 60,000 மின்னணு எந்திரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 60,000 வாக்குப் பதிவு இயந்திரங்கள்பயன்படுத்தப்படவுள்ளன.

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு மே 8ம் தேதி நடைபெறுகிறது. அனைத்துத்தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி விட்டது.

இதையடுத்து தமிழகத்தின் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் போட்டியிடும்வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஆகியவற்றை மின்னணு எந்திரங்களில்பீட் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தப் பணி முடிவடைந்த பின் அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும்சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு 7ம் தேதி காலையே அனுப்பி வைக்கப்பட்டுவிடும்.

மொத்தம் 60,000 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. மே 1ம் தேதிதல் 3ம் தேதிக்குள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, துணை ராணுவப் படையைச் சேர்ந்த12,000 பேர் தமிழகம் வரவுள்ளனர்.

வந்து சேர்ந்தவுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்படுவர்.

அதிக பதட்டம் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ள 5,000 வாக்குச் சாவடிகளில்15,000 அதி விரைவுப்படை மற்றும் அதிரடிப்படையைச் சேர்ந்த காவலர்கள்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+