சரத் ரசிகர்களை ரவுண்டி கட்டிய அதிமுகவினர்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் அதிமுகவினரும் சரத்குமாரின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நடு ரோட்டில்கட்டி, உருண்டு நாறினர்.

இரு நாட்களுக்கு முன் தஞ்சையில் காமராஜர் சிலை அருகே சரத்குமார் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால்,வரவில்லை. இதனால் அங்கு வந்த அதிமுகவினர் அவரைத் திட்டிக் கொண்டே கலைந்தனர். அப்போதேசரத்குமார் ரசிகர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.

இந் நிலையில் நேற்று மீண்டும் அதே இடத்தில் சரத்குமார் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. மீண்டும்அதிமுகவினரும் குமார் ரசிகர்களும் திரண்டனர். குமார் வர தாமதமானதால் மேடையில் கலை நிகழ்ச்சிகள் களைகட்டி நடந்து கொண்டிருந்தன.

வெயில் ஏறிக் கொண்டிருக்க அதிமுகவினர் கலைய ஆரம்பித்தனர். அப்போது ஒரு தொண்டர், சரத்குமார் என்னஎம்ஜிஆரா? வருகிறார்.. இதோ வந்துவிட்டார்னு 4 மணி நேரமா சொல்றானுக.. வர்ற வழியைக் காணோம். அவர்உண்மையிலேயே வர்றாரா இல்லையா என்று உரக்க குரல் கொடுத்தார்.

இதையடுத்து அங்கிருந்த சரத்குமார் ரசிகர்கள், அவர் மீது பாய்ந்தனர். கெட்ட வார்த்தைகளால் திட்டியபடிஅவரை அடித்து உதைத்தனர். இதைப் பார்த்த அதிமுகவினர் பதிலுக்கு குமார் ரசிகர்களை விரட்டி விரட்டிஅடித்தனர்.

இதைத் தொடர்ந்து குமாரின் ரசிகர்கள் தெறித்து ஓடினர். அவர்களை விடாமல் விரட்டிய அதிமுகவினர் நேத்துகட்சிக்கு வந்துட்டு உங்களுக்கு இவ்வளவு திமிரா என்று கேட்டபடி வேட்டிகளை உருவி அடித்தனர்.

நடுரோட்டில் இரு தரப்பினரும் பொட்டை வெயிலில் அடித்துக் கொண்டும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்கொண்டு உருண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு அவர்களை விலக்கி விட்டனர். இதையடுத்து பிற்பகலில் அங்கு வந்துசரத்குமார் பேச, முகம் வீங்கிப் போயிருந்த அவரது ரசிகர்களும் அதிமுகவினரும் ஒருவரை ஒருவர்முறைத்தவாரே நின்று கொண்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+