தயாநிதி மீது சிபிஐயில் சு.சுவாமி புகார்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தமிழக சட்டசபைத் தேர்தலில் எங்களது கூட்டணிக்கு 25 தொகுதிகளில் வெற்றிகிடைக்கும். எங்களது உதவியுடன்தான் யாரும் ஆட்சி அமைக்க முடியும் என்றுஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் சுவாமி பேசுகையில்,

வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. பாஜக தலைமையிலானஎங்களது கூட்டணியில் 18 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது மிகப் பெரியசாதனையாகும். தலித் கட்சிகளும் உள்ளன, டாக்டர் சேதுராமனும் உள்ளார்.

மத நல்லிணக்கக் கூட்டணியாக எங்களது கூட்டணி உள்ளது. இதனால் நாங்கள் 25தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும்ஆட்சி அமைக்க முடியாது.

ஜனதாவும், பாஜகவும் கூட்டணி வைத்ததற்குக் காரணம், இந்தியாவில் ஆபத்தில்உள்ள இந்து மதத்தைக் காக்கத்தான். ஜெயேந்திர்ர மீது பொய் வழக்கு போடப்பட்டுஅவரைக் கைது செய்ததன் பின்னணியில் சோனியா காந்தி உள்ளார்.

அவர் மிரட்டியதால்தான் ஜெயலலிதா, ஜெயேந்திரரைக் கைது செய்தார்.

அமைச்சர் தயாநிதி மாறன் அரசியல்ரீதியாக தனது சுமங்கலி கேபிள் விஷன்நிறுவனத்துக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். இது கேபிள் டிவிஆபரேட்டர் சட்டத்திற்கு விரோதமானது.

எனவே அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசைவலியுறுத்தியுள்ளேன்.

தமிழகத்தையே தங்களது காலனியாக மாற்ற தயாநிதி மாறனும், கலாநதி மாறனும்முயற்சித்து வருகிறார்கள். பத்திரிக்கை அலுவலகங்களுக்குப் போன் செய்துஇதைத்தான் போட வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறார்கள்.

டிவி, மீடியா அலுவலகங்களுக்குப் போன் செய்து இதைத்தான் காட்ட வேண்டும்என்கிறார்கள்.

டிடிஎச் திட்டத்தை இந்தியாவில் மாறன் சகோதரர்கள் நடததினால் தமிழகத்தைதங்களது கொத்தடிமையாக்கி விடுவர். தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து,சன் டிவிக்கு டிடிஎச் உரிமத்தை வழங்கி தயாநிதி மாறன் உத்தரவிட்டுள்ளார்.

இது சட்டவிரோதமானது. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் தயாநிதி மாறனுக்கு 7வருஷம் சிறைத் தண்டனை கிடைக்கும். இதுதொடர்பாக சிபிஐயிடம் புகார்செய்துள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன்என்றார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+