தயாநிதி-பிரதமர் தலையிட கோரி டாடா கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வசம் உள்ள மத்திய தொலைத் தொடர்புத்துறையின்செயல்பாடுகள் குறித்து தொழிலதிபர் ரத்தன் டாடா பிரதமர் மன்மோகன் சிங்குக்குபுகார் கூறி கடிதம் அனுப்பியுள்ளார்.

டிடிஎச் விவகாரத்தில் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியதாக பரபரப்புச் செய்திகள்வெளியாகி வருகின்றன. இதை தயாநிதி மாறன் மறுத்துள்ளார்.

இந் நிலையில் தயாநிதி மாறன் வசம் உள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறையின்செயல்பாடுகள் குறித்து புகார் கூறி பிரதமருக்கு டாடா நீண்ட கடிதம் ஒன்றைஅனுப்பியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமருக்கு டாடா எழுதியுள்ள கடிதத்தில் இடம்பெறுள்ள முக்கிய அம்சங்கள்:

ஒரு மொபைல் போனிலிருந்து இன்னொரு மொபைல் போனுக்குப் பேசுவதற்குஸ்பெக்ட்ரம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அலைவரிசை முக்கியமானது.இதை ஜிஎஸ்எம் தொழில்நுட்பம் கொண்ட போனில் சரியாக பயன்படுத்த முடியாது.

சிடிஎம்ஏ தொழில்நுட்பத்துடன் கூடிய போனில்தான் சிறப்பாக பயன்படுத்த முடியும்.சிடிஎம்ஏ தொழில்நுட்ப போன்கள்தான் நவீன தொழில்நுட்பத்தைச் சேர்ந்தவை.

ஆனால் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக உள்ள தயாநிதி மாறன்,சிடிஎம்ஏ செல் போன் சேவைக்கு குறைவாகவும், ஜிஎஸ்எம் செல்போன் சேவைக்குஅதிகமாகவும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஒதுக்கியிருக்கிறார்.

இந்த அலைவரிசைகளை ஏலம் விடவும் தொலைத் தொடர்புத்துறை நடவடிக்கைஎடுத்துள்ளது. ஆனால் இதை ஏலத்தில் விடாமல் அதற்கென தனிக் கட்டணம்நிர்ணயிக்க வேண்டும். அதுதொடர்பாக தேசியக் கொள்கை உருவாக்கப்படவேண்டும்.

ஆனால் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அவசர அவசரமாக அந்தஅலைவரிசை தொடர்பாக வழிகாட்டு நெறிகளை அறிவிக்க வேண்டிய அவசியம்என்ன?

இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் குழுவை மத்திய அரசுநியமித்துள்ளது. ஆனால் இப்படி அவசரமாக வழிகாட்டு நெறிகள்அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், டிராய் என அழைக்கப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறஆணையத்தின் பரிந்துரைகளும், அரசின் ஆய்வில் உள்ள நிலையில், அந்தஅடிப்படையில் தொலைத் தொடர்புத்துறை உத்தரவில் எந்தக் கருத்தும் இல்லை.

பழைய தொழில்நுட்பம் உடைய செல் போன்களைக் காக்க வேண்டும் என்ற பெயரில்புதிய தொழில்நுட்பங்கள் வராமல் தடுக்க முயலும் இந்த முயற்சி, தொழில்நுட்பத்துறையில் இந்தியா அடைந்து வரும் வளர்ச்சியில் மிகப் பெரிய பாதிப்பைஏற்படுத்தும்.

பழைய மாடல் விமானங்களைப் பயன்படுத்தி, மிக மெதுவாகச் செல்லும்விமானங்களுக்கு இணையாக, ஜெட் விமானங்களைப் பயன்படுத்தும் விமானநிறுவனங்களும், மிக மெதுவாக, அதிக எரிபொருள் செலவாகக் கூடிய உயரத்தில்பறக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் என்ன ஆகும்? அது மாதிரி தான் இதுவும்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 3ம் தேதி தொலைத் தொடர்புத்துறைசெயலர் ஜே.எஸ்.சர்மாவுககும், மே மாதம் அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் கடிதம்எழுதினேன். ஆனால் இதுவரை ஒரு பதிலும் வரவில்லை.

எனவே கூடுதல் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை எதையும் ஒதுக்குவதற்கு முன்பு தனியார்தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கருத்துக்களை தொலைத் தொடர்புத்துறை கேட்கவேண்டும்.

இந்தப் பிரச்சினையில் பிரதமர் நிச்சயம் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார்டாடா.

டாடாவின் இந்தக் கடிதம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் தன்னை தயாநிதி மாறன் மிரட்டியதாகவோ, டிடிஎச் சேவை திட்டத்தில்தங்களையும் சேர்க்கச் சொல்லி நெருக்கியதாகவோ டாடா தனது கடிதத்தில் ஏதும்குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+