கருணாநிதிக்கு தடை-டாண்டனுக்கு வைகோ கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜாதி துவேஷத்தைத் தூண்டும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிபேசியிருப்பதால் அவரை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட தடை விதிக்கவேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டனுக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ கூறுகையில்,

மதுரை உசிலம்பட்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது திமுக தலைவர்கருணாநிதி, சிறுத்தைகள் நடமாடலாம், சிங்கங்கள் நடமாடக் கூடாதா என்றுகேட்டுள்ளார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கும், தேவர்சமுதாயத்தினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அவர் கருத்துதெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மிருகஜாதிகளுக்குள் மோதல் ஏற்பட்டால் நான் என்ன செய்வது என்று கேட்டுள்ளார். இதன்மூலம் தேவரின மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் இடையேபதட்டம் ஏற்பட அவர் வழி செய்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகளில் முதல் விதியே, சாதிகளுக்குள் வேற்றுமையையோ,பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாகவோ ஒரு வேட்பாளர் பேசக் கூடாது, செயல்படக்கூடாது என்பதுதான்.

ஆனால் அந்த விதியை மீறும் வகையில் பேசியுள்ளார் சேப்பாக்கம் தொகுதியின்வேட்பாளரான கருணாநிதி.

தேர்தல் விதிமுறையை மீறும் வகையில், ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில்பேசியுள்ள கருணாநிதி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடத் தடை விதித்துதேர்தல் ஆணையம், கருணாநிதியை தகுதியற்றவராக அறிவிக்க வேண்டும் என்றுகோரி தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இதேபோல டாடா விவகாரம் தொடர்பாக அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தில்ஈடுபட்டு, இந்தியாவின் மன்னணித் தொழிலதிபரான டாடாவையே மிரட்டும்வகையில் நடந்து கொண்ட அமைச்சர் தயாநிதி மாறனை உடனடியாகஅமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன் என்றார் வைகோ.

முன்னதாக தாராபுரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் வைகோ பேசுகையில்,

இன்று டாடாவை மிரட்டியவர்கள் நாளை யாரையும் மிரட்டுவார்கள். திமுக மீண்டும்ஆட்சிக்கு வந்தால் அவர்களைத் தவிர வேறு யாரும் தொழில் செய்ய முடியாத நிலைஏற்படும்.

டாடாவை மிரட்டியதாக புகார் கூறியவன் நான்தான். என் மீதுதான் அவர்கள் வழக்குதொடர்ந்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பத்திரிக்கைகள் மீது வழக்குதொடர்ந்திருப்பது நியாயமற்றது.

கலர் டிவி கொடுத்து, கூடவே கேபிள் இணைப்பையும் வழங்கி தனது குடும்பத்தினர்நன்றாக சம்பாதிக்கட்டும் என்று நினைக்கிறார் கருணாநிதி. தேர்தலுக்காக கடைசிநேரத்தில் எந்த அஸ்திரத்தையும் பயன்படுத்துவார் கருணாநிதி.

பொதுமக்கள் கஷ்டப்பட வேண்டும். அவர்கள் கஷ்டப்படாமல் இருந்தால், ஜாதிக்கலவரமின்றி அமைதியாக இருந்தால் அவருக்குப் பிடிக்காது. ஜாதிக் கலவரத்தைஏற்படுத்தி, அதில் அரசியல் லாபம் பெற நினைப்பவர் திமுக தலைவர்.

4 லட்சம் முதலீட்டில் தொடங்கிய எந்த நிறுவனமும் ரூ. 40,000 கோடி சம்பாதித்ததுஇல்லை. ஆனால் கருணாநிதி குடும்பம் மட்டும்தான் அந்த சாதனையை செய்துள்ளது.

10 ரூபாய்க்கு விற்ற சன் டிவியின் பங்கு இப்போது 1,475 ரூபாய்க்கு விற்கிறது.(தனது பங்கு விற்பனையை சன் டிவி ஆரம்பித்ததே இப்போ தானங்க.. பத்துரூபாய்க்கு எப்போ வித்தது?)

அதன் மூலம் 13,000 கோடி ரூபாய் லாபம் பெறுகின்றனர். சுமங்கலி கேபிள் விஷன்மூலம் 800 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது.

பத்திரிக்கை, தொலைக்காட்சி துறைகளில் அவர்கள் ஏகபோக ஆதிக்கம் செலுத்தஆசைப்படுகிறார்கள். இதனால் கருத்து சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்ஏற்பட்டுள்ளது.

இதை தமிழக மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றார் வைகோ.

உணர்ச்சிவசப்படக் கூடாது:

முன்னதாக ஒட்டன்சத்திரத்தில் பேசிய வைகோ,

எனது பொதுக்கூட்டங்களில் தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும். நீங்கள்உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை திமுக குடும்ப ஏடுகள் வேறு விதமாக திரித்து செய்திவெளியிட்டு நமது கூட்டங்களுக்கு களங்கம் கற்பித்து விடுகின்றன என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.ஒட்டன்சத்திரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது வைகோ பேசினார். அப்போது 2தொண்டர்கள் எழுந்து திமுக தலைவர் கருணாநிதியைப் பற்றி பேசுங்கள் என்றுகோஷமிட்டனர்.இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

தொண்டர்களை அமைதிப்படுத்திய வைகோ, இங்கு 10,000க்கும் மேற்பட்டோர்கூடியிருக்கிறீர்கள். அவர்களில் ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் கருணாநிதி குறித்துப்பேசுங்கள் என்று கேட்கிறீர்கள். நானும் சொல்கிற விஷயங்களை சொல்லிக்கொண்டுதான் வருகிறேன்.

ஆனால் வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டது, அவர் திணறிப் போனார், கூட்டமேகுழப்பத்தில் முடிந்தது என்று திமுக குடும்ப ஏடுகளில் செய்திகள் போடுகிறார்கள்.எனவே தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டால் அருகில் இருக்கும் தொண்டர்கள்அவர்களை கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

நமக்கு உள்ள சாதனமே இந்தக் கூட்டம்தான் என்றார் வைகோ.

40 கோடி என்னாச்சு?இவ்வாறு வைகோ பேசிக் கொண்டிருந்தபோது அருகே இருந்த மாடியில் நின்றிருந்தஇளைஞர் ஒருவர் வைகோவை நோக்கி, தலைவா 40 கோடி என்னாச்சு (அதிமுகவிடம்கூட்டணி சேர வைகோ பணம் வாங்கியதாக உள்ள புரளியை நினைவில் கொள்க)கேட்டார்.

4 விரலைக் காட்டி அந்த இளைஞர் கேட்கவே, டென்சனான வைகோ, ஆகவேஅதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லிவிட்டு பிரச்சாரத்தை பாதியிலேயேமுடித்துவிட்டுக் கிளம்பினார்.

இதையடுத்து மாடிக்கு ஓடிய போலீசார் அந்த இளைஞரைப் பிடித்து காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று டின் கட்டி அனுப்பினர். இனிமேல் வைகோ கூட்டம் நடக்கும்இடத்துக்கு பக்கமே வரக் கூடாது என அவர் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக வைகோவின் கூட்டங்களில் ரூ. 40 கோடி வாங்கிட்டீங்களாமே என்றுதொண்டர்கள் கேள்வி கேட்டு டென்சன் தந்து வந்தனர்.

ஆரம்பத்தில் இதையெல்லாம் சிரித்தவாரே சமாளித்த வைகோ, ஒரு கட்டத்தில்டென்சனாகி இனிமேல் யாராவது அப்படி கேட்டால் அவர்களை தனியே தூக்கச்சொல்லி அந்தந்தப் பகுதி மதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+