தமிழகத்திலேயே அதிகம் படித்த வேட்பாளர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிக அதிகமாகப் படித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்தேமுதிவின் சார்பில் போளூரில் போட்டியிடும் டாக்டர் புர்ஷோத்தமன்.
எம்பிபிஎஸ் படித்தவரான புருஷோத்தமன் மருத்துவத்தில் 12 உயர் பட்டப் படிப்புகளையும்,டிப்ளமோக்களையும் முடித்துள்ளார். இதில் எம்.பில் (ஜெனிடிக்ஸ்), வெட்னரி சையன்சில் பிஎஸ்.சி, ஹூயுமன்அனாடமியில் பி.ஜி. டிகிரி, பி.எட் ஆகியவையும் அடங்கும்.இவை தவிர கிரிமினாலஜி, பாரன்சிக் சைன்ஸ், பொலிடிக்கல் அட்மினிஸ்ட்ரேசன், ஜர்னலிசம், ஆந்த்ரபாலஜி எனபல்வேறு துறைகளில் டிப்ளமோக்களையும் முடித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த இவர் அங்கேயே போட்டியிடுகிறார். படிப்பில் இவருக்குஎப்போதுமே மிக அதிகமான ஆர்வமாம்.
போளுர் தொகுதி மக்கள் இவருக்கு என்ன பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications