த வீக் கருத்துக் கணிப்பு: திமுக 45%: அதிமுக 42%
சென்னை:
முன்னணி ஆங்கில வார இதழான த வீக் நடத்தியுள்ள தேர்தல் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிமுன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 45 சதவீத வாக்குகளும், அதிமுக கூட்டணி 42 சதவீத வாக்குகளும்பெற்றுள்ளன.கேரளத்தின் மலையாள மனோரமா பப்ளிகேசன்ஸ் வெளியிடும் இந்தப் பத்திரிக்கை கடந்த 2001ம் ஆண்டில்அதிமுகவே வெல்லும் என கருத்துக் கணிப்பு வெளியிட்டது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் இப்போது சட்டமன்றத் தேர்தலையொட்டி விரிவான கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளைவெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
திமுக அணிக்கு மக்களிடம் 45 சதவீத ஆதரவும், அதிமுக அணிக்கு 42 சதவீத ஆதரவும் உள்ளது.மற்றவர்களுக்கு 13 சதவீத ஆதரவு நிலவுகிறது.
இதன் அடிப்படையில் திமுக கூட்டணிக்கு 130 முதல் 138 இடங்கள் வரை கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு 87முதல் 95 இடங்கள் கிட்ைககும். மற்ற கட்சிகளுக்கு 5 முதல் 13 இடங்கள் கிடைக்கலாம்.
கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைவிட இப்போது திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்குகள் அதிகம்கிடைக்கும்.
அதே நேரத்தில் அதிமுக கடந்த தேர்தலில் பெற்றதை விட 8 சதவீத வாக்குகளை இழக்கும்.
கடைசி நேரத்தில் வாக்காளர்கள் ஒரு பக்கமாக சாயவும் வாய்ப்புள்ளது. திமுகவுக்கு கூடுதலாக இன்னும் 1.5சதவீதம் வாக்குகள் கிடைத்தால், அந்தத் கூட்டணிக்கு 160 தொகுதிகள் கிடைக்கும். அதிமுகவுக்கு 65 இடங்களேகிடைக்கும்.
முதல்வர் பதவிக்கு யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு 46 சதவீதமும், ஜெயலலிதாவுக்கு 44சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது.
இவ்வாறு த வீக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications