கருணாநிதியின் யூஸ் அன்ட் த்ரோ டிவி-செந்தில்
திருநெல்வேலி:
திமுக தலைவர் கருணாநிதி தரப்போவது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீட்டுதூக்கி தூர எறியும் யூஸ் அன்ட் த்ரோ டிவிதான். எனவே மக்கள் இதை நம்பி ஏமாந்துவிடக் கூடாது என்று காமெடி செந்தில் கூறியுள்ளார்.
சேரன்மாதேவி தொகுதி அதிமக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து நடிகர்செந்தில் பிரசாரம் செய்தார்.அவர் பேசுகையில்,
அம்மா தமிழக மக்களுக்காக என்ன கொடுககவில்லை? படிக்க இலவச புத்தகம்,பள்ளிக் கூடத்திற்குப் போய் வர இலவச சைக்கிள், வயிராற சாப்பிட நல்ல சத்துணவு,தொட்டில் குழந்தைகள் திட்டம், இலவச வேட்டி, சேலை, மகளிர் சுய உதவிக் குழுஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இலவச டிவி தரப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். உங்களுக்குஒரு விஷயம் தெரியுமா?. இந்த டிவி நல்ல டிவி கிடையாது. அதாவது யூஸ் அன்ட்த்ரோ வகையிலான டிவி இது. இந்த டிவியில் ஏதாவது ரிப்பேர் ஆகி விட்டால்அவ்வளவுதான், அதற்குப் பிறகு அதை பயன்படுத்த முடியாது, தூக்கி தூர எறியவேண்டியதுதான்.
எனவே கருணாநிதி சொல்வதை மக்கள நம்பி ஏமாந்து விடக் கூடாது.
மக்களே, நல்லா சிந்திச்சுப் பாருங்கள், உங்களுக்கு டிவி வேண்டுமா, இல்லைகுழந்தைகளின் வளமான வாழ்வுக்கு படிப்பு வேண்டுமா? தூண்டில் போட்டு மீன்பிடிப்பதைப் போல வாக்காளர்களுக்கு இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசிவாக்குகளை அள்ள திட்டமிடுகிறார் கருணாநிதி என்றார் செந்தில்.












Click it and Unblock the Notifications