திமுக ஆட்சி-2 முதல்வர்கள்: கேரள ஜோதிடர் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வருகிற சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவே ஆட்சி அமைக்கும். அந்தஆட்சியில் 2 முதலமைச்சர்கள் இடம் பெறுவர் என்று கேரளாவைச் சேர்ந்த ஜோதிடர்குருவாயூர் சூரியன் நம்பூதிரி என்பவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சட்டசபைத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும். அதிமுகதோற்கும். பெரும்பான்மை பலத்துக்கு தேவையான இடங்களை விட கூடுதலாக 60இடங்கள் வரை திமுக வெல்லும்.இதில் 15 இடங்கள் கூடலாம் அல்லது குறையலாம்.
திமுக ஐந்து ஆண்டு காலம் முழுமையாக ஆட்சி நடத்தும். இந்த ஆட்சியில் 2முதலமைச்சர்கள் பொறுப்பு வகிப்பார்கள். முதலில் பதவியேற்கும் முதல்வர் மாறுவார்என்றார்.
இரண்டு முதல்வர்கள் என்று கூறியுள்ள சூரியன் நம்பூதிரி, அந்த முதல்வர்கள் யாராகஇருப்பார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications