மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன்தொடங்கியது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற சித்திரைத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழாஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.மேளதாளம் முழங்க, மங்கல இசையுடன் கொடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்துநேற்று முதல் இரவு தோறும் மீனாட்சி அம்மனும், சோமசுந்தர சுவாமிகளும்அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வருவார்கள்.
முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்பட்டாபிஷேகம் 7ம் தேதியும், திக் விஜயம்8ம் தேதியும், திருக் கல்யாணம் 9ம் தேதியும் நடைபெறும்.
சித்திரைத் திருவிழாவுடன் இணைந்த அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் 13ம் தேதிநடைபெறுகிறது. அழகர்கோவில் சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வருகிற9ம் தேதி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications