ரூ.5025 கோடிக்கு கணக்கு எங்கே?-பசி கேள்வி
புதுக்கோட்டை:
சுனாமி நிவாரணத்துக்காக மத்திய அரசு கொடுத்த ரூ. 5,025 கோடிக்கு கணக்கு எங்கே என்று முதல்வர்ஜெயலலிதாவுக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் பேசியதாவது:இப்போது நம்மோடு இருக்கும் கூட்டணி 2001ல் ஜெயலலிதாவோடு இருந்தது. அவர் திருந்திவிட்டதாகநினைத்து அவருடன் கூட்டணி வைத்தார்கள். அவர் திருந்தவே மாட்டார். அவரைத் திருத்தவும் முடியாது.திருந்தியது மாதிரி நடித்துள்ளார்.
நான் நிதியமைச்சரானவுடன் முதல் கட்டமாக ரூ. 2,424 கோடியில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்நிறைவேற்றப்பட்டது. தமிழர்களுக்கு தமிழகத்துக்கு நல்லது செய்யும் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா இன்று வரைஎதிர்க்கிறார். அதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை.
சுனாமி பாதிக்கப்பட்டபோது ரூ. 5,025 கோடியை வழங்கினோம். அந்த நிதிக்கு தமிழக அரசிடம் உரிய கணக்கேஇல்லை. பணம் என்னவானது? இது குறித்து ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார்.ஜெயலலிதா தயாரா?
திமுகவின் தேர்தல் அறிக்கையைக் கண்டு பயந்த ஜெயலலிதாவும், அவரது காசு வாங்காத வக்கீல் வைகோவும்இதெல்லாம் பித்தலாட்டம், ஏமாற்று வேலை என வாய் கிழிய கத்திவிட்டு இப்போது 10 கிலோ அரிசி இலவசம்என்கின்றனர். இவர்களுக்கு மட்டும் எப்படி இது சாத்தியமாகும்?
சேது சமுத்திரத் திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன் என்று பேசிக் கொண்டிருந்த வைகோ, இப்போதுஜெயலலிதாவுடன் சேர்ந்தவுடன் அது பற்றி பேசுவதையே நிறுத்திவிட்டது ஏன்?. அந்தத் திட்டத்தை வைகோவும்இப்போது எதிர்க்கிறாரா? என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications