த வீக் கருத்துக் கணிப்பு: வைகோ புது விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மேட்டுப்பாளையம்:

திமுக எழுதிக் கொடுத்ததையே கருத்துக் கணிப்பாக வெளியிட்டுள்ளது த வீக் ஆங்கில வார இதழ் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வைகோ பேசியதாவது:

தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் அதிமுக வெல்லும். புரட்சித் தலைவியின் ஆட்சி நிலைத்திட மக்கள்விரும்புகிறார்கள். ஏனென்றால் கடந்த 5 வருடமாக சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டுள்ளது.

மதச் சண்டை இல்லை. தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது. கருணாநிதி ஆட்சியில் தான் கோவைஅப்பாவி முஸ்லீம்கள் சிறையில் பூட்டப்பட்டு இதுவரை வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகளின் கடனை ரத்து செய்வேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். கடந்த 2 வருடத்தில்இதுபோன்ற அறிவிப்பை மத்திய மந்திரிகள் வெளியிட்டதுண்டா?

ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை (த வீக்) கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அந்தப் பத்திரிக்கை விரைவில் ஒருடிவி சேனல் தொடங்கவுள்ளது. அதற்காக தயாநிதி மாறனின் தயவைப் பெற, திமுக எழுதிக் கொடுத்ததையேகருத்துக் கணிப்பாக வெளியிட்டுள்ளார்கள். அந்தக் கருத்துக் கணிப்பைக் கண்டு தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+