வாக்களிக்க 13 ஆவணங்கள்: நரேஷ் குப்தா!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 13ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 13மாற்று ஆவணங்களை பயன்படுத்தலாம்.

இந்த 13 ஆவணங்களும், 31.12.2005க்குள் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.

அதன் விவரம:1. ஓட்டுனர் உரிம்

2. பாஸ்போர்ட்

3. வருமான வரி அடையாள அட்டை

4. மத்திய, மாநில அரசுப் பணி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள்ஆகியவற்றின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள்

5. பொதுத் துறை வங்கிகள், தபால் துறை அலுவலகம் ஆகியவற்றின் கணக்குப்புத்தகங்கள்

6. ரேஷன்கார்டு

7. கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகள்

8. முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வூதியப் புத்தகங்கள், ஓய்வூதிய உத்தரவு, இறந்துபோன ராணுவ வீரர்களின் வாரிசுகளுககான சான்றிதழ்

9. முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை

10. புகைப்படத்துடன கூடிய ரயில்வே அட்டை

11. சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான அடையாள அட்டை

12. துப்பாக்கி உரிமம்

13. ஊனமுற்றோர் அடையாள அட்டை

இவற்றின் அசல்களை மட்டுமே வாக்குப் பதிவு தினத்தன்று எடுத்து வர வேண்டும்,நகல்களைக் கொண்டு வரக் கூடாது என்று கூறியுள்ளார் குப்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+