நாளை முதல் அக்னி நட்சத்திரம்-மண்டை காயும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கொடுமையான கோடை வெயில் காலம் நாளை (வியாழக்கிழமை)தொடங்குகிறது.
மே 28ம் தேதி வரை இந்த கத்திரி வெயில் காலம் நீடிக்கும்.வழக்கத்தை விட இந்த முறை முன் கூட்டியே கோடை காலம் தொடங்கிவிட்டது. தமிழகம் முழுவதுமே வெயில்வாட்டி வருகிறது.
காலையில் மட்டுமின்றி இரவிலும் புழுக்கம் கொடுமைப்படுத்தி வருகிறது.
இந் நிலையில் கோடை காலத்தின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. இந்த வெயில் வரும்28ம் தேதி வரை நீடிக்கும். இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாகும்.












Click it and Unblock the Notifications