டாடா, பிர்லாவுக்கானதல்ல திமுகவின் தேர்தல் அறிக்கை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டாடாக்கள், பிர்லாக்கள் வாழ வேண்டும் என்பதற்காக திமுக தேர்தல் அறிக்கைதயாரிக்கப்படவில்லை. ஏழையின் கண்ணீரைத் தொட்டு எழுதப்பட்டது திமுக தேர்தல்அறிக்கை என்று கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜே. அன்பழகனை ஆதரித்துநடந்த பிரசாரக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில்,

2001ல் திமுகதான் சட்டசபைத் தேர்தலில் வெல்லும் என நாடே எதிர்பார்த்தது. நாமும்பெருமையுடன் இருந்தோம். பெயர் இருந்தது, இவ்வளவு இருந்தும் கூட கூட்டணிபலம் இல்லாத காரணத்தால்தான் அன்றைக்கு நாம் ஆட்சியை தொடர முடியாமல்போனது. வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

முதல்வரான ஜெயலலிதா தமிழகத்தை உயர்த்தப் போவதாக சொன்னார். ஆனால்என்ன செய்தார்? மணள் கொள்ளையிலும், மதுக் கொள்ளையிலும் இறங்கினார்.மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அரசு வேலை நியமனத் தடைச்சட்டத்தைப் பிறப்பித்தார். டாஸ்மாக் கடைகளைத் திறந்தார்.

சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். அரசுஊழியர்கள், ஆசிரியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பினார்.

இப்படிப்பட்ட ஜெயலலிதா நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வியதும் தான்எடுத்த நடவடிக்கைகளில் சிலவற்றை திரும்பப் பெற்றார். இதைப் பார்த்ததும்ஜெயலலிதா திருந்தி விட்டதாக சில பத்திரிக்கைகள் பாராட்டி எழுதின.

திமுகவின் தேர்தல் அறிக்கையை எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஏன்? இதுஏழையின் கண்ணீரைத் தொட்டு எழுதியதாகும். உழைப்பவருடைய உதிரத்தைத்தொட்டு எழுதப்பட்ட அறிக்கை.

டாடாக்கள், பிர்லாக்கள் போன்றோர் வாழ வேண்டும் என்பதற்காக இவற்றை நாங்கள்தீட்டவில்லை. விவசாயிகளுக்காக எழுதப்பட்ட அறிக்கை.

தங்கத்தில் தாலி தரப் போவதாக கூறுகிறார்கள். நான் தங்கத்தில் தாலி தர வேண்டாம்என்று சொல்லவில்லை. நீங்கள் ஜெயித்து வந்தாலும், வராவிட்டாலும் கொடுங்கள்.நீங்கள் வெறும் ரூ. 3,500 மதிப்புள்ள தங்கத் தாலியை வழங்குங்கள்.

நான் ரூ. 15,000 பணம் கொடுத்து திருமணம் செய்து வைக்கிறேன். ஆளுங்கட்சியும்,எதிர்க்கட்சியும் திருமண மேடைக்குப் போய் திருமணத்தை நடத்தி வைத்தால்எவ்வளவு சுமூகமாக இருக்கும் என்றார் கருணாநிதி.

வாக்கு சாவடியில் பந்தல்:

இதற்கிடையே, தமிழகத்தில் கடும் வெயில் அடித்து வருவதால் வாக்குச்சாவடிகளுக்கு முன் பந்தல் அமைக்க வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார். இதுகுறித்து பரிசீலித்து வருவதாக தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. வெயில் கொடுமை அதிகம்இருக்கும் என்பதால், வாக்குச் சாவடிகளுக்கு முன்பு பந்தல் அமைக்க வேண்டும்.இதன் மூலம் வாக்காளர்கள் தப்ப முடியும் என்று கூறி கருணாநிதி, தேர்தல்ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கருணாநிதியின் இந்தக் கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும், ஓரிரு நாளில்முடிவு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+