ஜெயாவின் ஆட்சி ஒரு டிராஜிக் காமெடி: ப.சி

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் பேசியதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு சைபர் மார்க் போட்டீர்கள். அதையே இந்த முறையும்போடுங்கள். காரணம், அவர் அந்த மார்க் வாங்கும் அளவுக்குத் தான் ஆட்சி செய்தார்.

ஜெயலலிதாவின் ஆட்சி கோமாளித்தனமான, நகைச்சுவையான ஒன்று. நகைச்சுவையென்றால் முழு நீளக் காமெடிஅல்ல, அது ஒரு டிராஜிக் காமெடி. காரணம், ஜெயலலிதாவின் கோமாளித்தனத்தால் மக்கள் அடைந்த கஷ்டம்.இதனால் சோகம் இழையோடிய நகைச்சுவையான ஆட்சி தான் ஜெயலலிதா ஆட்சிய

என்னைப் பார்த்து ப.சிதம்பரத்துக்கு இரட்டை நாக்கு என்கிறார் வைகோ. யாருக்கு ரெட்டை நாக்கு? முதல்சனிக்கிழமை மாலைப் பொழுதில் நிருபர்களிடம் பேசும் வைகோ, அடுத்த முதல்வர் அண்ணன் கலைஞர் தான்என்கிறார்.

அடுத்த சனிக்கிழமை காலைப் பொழுதில் புரட்சித் தலைவி அம்மா தான் முதல்வர் என்கிறார். முதல்சனிக்கிழமைக்கும் அடுத்த சனிக்கிழமைக்கும் இடையே சனிப் பெயர்ச்சியா நடந்துவிட்டது?

ஜெயலலிதாவிடம் காசு வாங்காத வக்கீலாக வைகோ செயல்படுகிறார். (கூட்டத்தில் பெரும் ஆராவாரம்). நான்காசு வாங்காத என்று தான் சொன்னேன்.. நீங்கள் அதுக்கு அர்த்தம் கொடுத்தால் நான் பொறுப்பல்ல.. என்றார்சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+