மன்மோகன் இன்று பிரச்சாரம்-நாளை சோனியா
சென்னை:
பிரதமர் மன்மோகன் சிங் சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இன்று பிரசாரக்கூட்டங்களில் பேசுகிறார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திகடந்த வாரம் சென்னை, மதுரை ஆகிய நகர்களில் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில்பேசினார்.இதைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மன்மோகன் சிங் இன்று தமிழகம் வருகிறார்.
பகல் 1.45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து சென்னை வரும்மன்மோகன் சிங் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்கிறார்.
அங்கு மாலையில் நடக்கம் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
பின்னர் 7.20 மணிக்கு சென்னை திரும்பும் அவர் தீவுத் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இரவு 8.25 மணிக்கு மீண்டும் டெல்லி திரும்புகிறார். திருச்சியில் நடைபெறும்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சென்னையில் நடைபெறும் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில்நடக்கிறது.
மீண்டும் சோனியா வருகை:
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2வது கட்டமாக நாளை (5ம்தேதி) தமிழகம வருகிறார். தனி விமானம் மூலம் மதுரை வரும் சோனியா காந்திஅங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.
தூத்துக்குடியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.பின்னர் மீண்டும் மதுரை வரும் சோனியா அங்கிருந்து கோவை செல்கிறார்.கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து டெல்லி திரும்புகிறார்.
விதி மீறலலில்லை: திமுக-காங் விளக்கம்
இதற்கிடையே கடந்த முறை தமிழகத்தில் சோனியா காந்தி கலந்து கொண்ட தேர்தல்பிரசாரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை என்று திமுகவும், காங்கிரஸும்,தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளித்துள்ளன.
சென்னை தீவுத் திடலில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்திபங்கேற்றார். அப்போது விமான நிலையத்திலிருந்து தீவுத் திடல் வரை அவரது கார்சென்றபோது கூடவே 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.
இது தேர்தல் விதிமீறலாகும். இதுகுறித்து விளக்கம் அளிக்க திமுக, காங்கிரஸ், பாமக,கம்யூனிஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸுக்கு அனைத்துக் கட்சிகளும் பதில் அனுப்பியுள்ளன. பாமக, இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட ஆகிய கட்சிகள் அனுப்பிய பதிலில், இந்தக்கூட்டத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. மேடையில் பங்கேற்றதோடு சரி.எனவே இதில் நாங்கள் சொல்வதற்கு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளன.
திமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், தீவுத் திடலுக்குள் நுழைவதற்கு 2 வழிகள்உள்ளன. கடற்கரைச் சாலையிலிருந்தும், அண்ணா சாலையிலிருந்தும்தான் நுழையமுடியும். சென்னையிலும், அருகில் உள்ள மாவட்டங்களிலும் உள்ள கட்சித்தொண்டர்கள் தங்களுடைய வாகனங்களில் பொதுக் கூட்டத்திற்கு வந்தனர்.
வேறு சாலை இல்லாததால்,அவர்கள் சோனியா காந்தியின் காருக்குப் பினனால் சென்றபிற வாகனங்களுடன் சென்றனர். இவையெல்லாம் வாகனத் தொடரில் வந்தவைஎன்று எப்படிக் கூற முடியும் என்று கேள்வி எழுப்பட்டுள்ளது. இதே விளக்கத்தையேகாங்கிரஸ் கட்சியும் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications