பாண்டிச்சேரி: 84 சதவீத வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட 3 தொகுதிகளில் நடந்த முதல் கட்டதேர்தலில் வரலாறு காணாத வகையில் 84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுவைக்கு உட்பட்ட மாஹே, பல்லூர், ஏனாம் ஆகிய தொகுதிகளில் மட்டும்புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை முதல் விறுவிறுப்பாக நடந்துவந்த வாக்குப் பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.3 தொகுதிகளிலும் 55 சதவீத வாக்குகள் பதிவானதாக முதல்கட்ட தகவல்தெரிவித்தது. ஆனால், இரவில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் அங்கு84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஓட்டுப் பதிவு அமைதியாக நடந்தது. கள்ள ஓட்டுப் போட முயன்ற ஒருவர்பிடிபட்டார் என்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி குமாரசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications