பிரமோத் மகாஜன் உடல் தகனம்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

மும்பை சிவாஜி பார்க்கில் அரசு மரியாதைகளுடன் நடந்த இறுதி நிகழ்ச்சியில் அவரது உடலுக்கு மகன் ராகுல் தீமூட்டினார்.

முன்னதாக அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல்,சரத் பவார், பாஜக, காங்கிரஸ் தலைவர்கள், பாஜக தொண்டர்கள் மலரஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி அப்துல்கலாமின் சார்பில் அவரது உடலுக்கு மேஜர் ஜெனரல் வினோத் சோப்ரா மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார்.

தம்பியால் சுடப்பட்டு 12 நாட்கள் உயிருக்குப் போராடிய மகாஜன் நேற்று மரணமடைந்தார். இரவு அவரது உடல்பாஜக மாநில தலைமையகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான பாஜக தொண்டர்கள்அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஜெ, கருணாநிதி, வைகோ இரங்கல்

பிரமோத் மகாஜன் மறைவுக்கு தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், மிகச் சிறந்த பேச்சாளரும், துடிப்புள்ள இளம் தலைவருமான மகாஜனின் மறைவு பெரும்துயரத்தைத் தந்துள்ளது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இளமையும், துடிப்பும் கொண்டு விளங்கிய திறமையாளர் பிரமோத் மகாஜன். அவரை இழந்து வாடும்அவரது குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அமைச்சராக இருந்து பிரமோத் மகாஜன் ஆற்றிய பணிகளை நாடு மறக்காது என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில்,

புகழ் மிக்க இளம் தலைவரான மகாஜன் மறைந்த துயர செய்தி, துன்ப இடியாக என்னைத் தாக்கியது. தலைசிறந்த எம்.பியாக, திறமை மிக்க மத்தியஅமைச்சராக, கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரையும் வசீகரிக்கும் காந்த சக்தி மிக்க மனித நேயராக திகழ்ந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அஞ்சல் தலையை வெளியிட வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை ஏற்று 30 நாட்களில் அந்த சாதனையை நிகழ்த்திக்காட்டினார். அதுவும் சென்னையில் அஞ்சல் தலையை வெளியிட்டு அவர் ஆற்றிய உரை என் நெஞ்சை விட்டு அகலாது என்று கூறியுள்ளார் வைகோ.

இதேபோல பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக துணைத் தலைவர் இல.கணேசன், மாநில பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும்இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மகாஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று பிற்பகல் வரை தேர்தல் பிரசாரத்தை நிறுத்தி வைப்பதாக தமிழகபாஜக அறிவித்துளளது.

இந் நிலையில் மகாஜனின் உடல் இன்று அரசு மரியாதையுடன் மும்பை சிவாஜி பார்க்கில் தகனம் செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+