மறுப்பு வெளியிட டாடாவுக்கு நிர்ப்பந்தம்-வைகோ

Subscribe to Oneindia Tamil

கலிங்கப்பட்டி:

தயாநிதி மாறன் மிரட்டல் விவகாரத்தை மறுத்து அறிக்கை வெளியிடுமாறு டாடா நிறுவனத்துக்கு கடுமையானநிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு அடிபணிய டாடா நிறுவனம் மறுத்து விட்டது என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

டாடா-தயாநிதி விவகாரத்தில் கிரிக்கெட் கமெண்ட்ரி மாதிரி வைகோ லைவ்-ரிலே கொடுத்து வருகிறார்.

இந் நிலையில் நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் வீட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வந்தார்.

இரு தலைவர்களும் பின்னர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது வைகோ கூறுகையில்,

தொழிலதிபர் டாடாவை டிடிஎச் திட்டம் தொடர்பாக தயாநிதி மாறன் மிரட்டியது தொடர்பாக நான் முதலில் கூறியபுகார் இப்போது நிரூபணமாகி வருகிறது. இந்தப் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பயந்து போயுள்ள திமுகதரப்பு காங்கிரஸ் உதவியுடன் டாடா நிறுவனம் இதுதொடர்பாக மறுப்பு அறிக்கை வெளியிடுமாறு நிர்ப்பந்தம்செய்து வருகிறது.

மிகக் கடுமையான நிர்ப்பந்தம் டாடா நிறுவனத்துக்குக் கொடுக்கப்படுகிறது. ஆனால் இதற்கு அடிபணிய டாடாநிறுவனம் மறுத்து விட்டது.

தயாநிதி மாறனுக்கு தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அந்த்த துறையைபெற்ற திமுக தலைவர் கருணாநிதி, அந்த்த துறையை வைத்துக் கொண்டு தனது குடும்பத்தையும், குடும்பத்தொலைக்காட்சியையும் முன்னேற்றுவதில் மட்டுமே அக்கறை காட்டி வருகிறார்.

விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார் தமிழக தல்வர்ஜெயலலிதா. இந்த முடிவுககு நபார்டு வங்கி ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட, மறு நிதியுதவி செய்யமுன்வராவிட்டாலும் கூட, மத்திய அரசு எந்த உதவியையும் செய்யாவிட்டாலும் கூட நிலையை மாநில அரசேசமாளித்துக் கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் என்ன கூறப்படடுள்ளது? கடன் வாங்கியிருந்த விவசாயி உயிரிழந்தால்மட்டுமே அவர் வாங்கியிருந்த கடன் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும என கருணாநிதிதெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கான கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு முன்பு கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருணாநிதியைவற்புறுத்தியபோது, அதற்கு நபார்டு வங்கி சம்மதிக்காது எனவே முழுமையாக தள்ளுபடி செய்வது சாத்தியமல்லஎன்றார். ஆனால இப்போது முழுமையாக தள்ளுபடி செய்வோம், ஆனால் அதற்கு முன் அந்த விவசாயி சாகவேண்டும் என்று கூறுகிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற திமுக, அங்குள்ள 13 மத்திய அமைச்சர்களைவைத்துக் கொண்டு விவசாயிகள் நலனுக்காக என்ன செய்தது? விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யமத்திய அரசின் உதவியை திமுக நாடாதது ஏன்? இதுதொடர்பாக மத்திய அரசிடம் கருணாநிதி பேசியிருப்பாரா,ஒரு கடிதமாவது எழுதியிருப்பாரா? எதுவும் செய்யாமல் இப்போது முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பைவிமர்சித்துப் பேசி வருகிறார்.

கருணாநிதி குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் நான் கூறி வரும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் படிப்படியாகநிரூபணமாகி வருகிறது. இதை மக்கள் உணர வேண்டும் என்றார் வைகோ.

பின்னர் திருமாவளவன் பேசுகையில், தலித் மக்கள் திடீர் பாசம் கொண்டு நீலிக் கண்ணீர் வடிக்கிறார் கருணாநிதி.கடந்த காலங்களில், திமுக ஆட்சிக்காலத்தில் தலித் மக்கள் மீது நடந்த வன்கொடுமைத் தாக்குதல்களைக்கண்டிக்காத கருணாநிதி இப்போத பாசம் கொண்டவர் போல நடிக்கிறார்.

தலித் மக்களை அரவணைத்துக் கொண்ட தலைவர் போல காட்டிக் கொள்கிறார். முதலைக் கண்ணீர் வடிக்கிறார்,நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இதை தாழ்த்தப்பட்ட மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள், கருணாநிதியின்நாடகத்தைக் கண்டு அவர்கள் ஏமாந்து விட மாட்டார்கள் என்றார் திருமா.

பிரதமருக்கு வைகோ கோரிக்கை:

முன்னதாக விருதுநகர் தொகுதி மதிமுக வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார். அப்போது பலத்த மழை பெய்தது. இருப்பினும்மழையைப் பொருட்படுத்தாமல் வைகோ பேசினார்.

மழையில் நனைந்தபடி சுமார் முக்கால்மணி நேரம் வைகோ பேசுகையில், திமுக தொண்டர்களின் உழைப்பைப் பயன்படுத்தி கருணாநிதி குடும்பத்தினர் அடிக்கிறகொள்ளை நிறுத்தப்பட வேண்டும்.

கலைஞரின் குடும்ப அரசியலுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். எந்த ஃபிராடு வேலை செய்தாலும் வைகோ அதை உடைத்துவிடுகிறானே என்று கருணாநிதிக்கு என் மீது கோபம். அதனால் என் மீது ஏதாவது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிடுகிறார்.

தனது பேரனை விட்டுப் பேச வைக்கிறார். கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாதவர் கருணாநிதி. மனசாட்சி இல்லாதவர். அதனால்தான் நான்தலித்துகள் சாவுக்குக் காரணமாக இருந்தேன என்று என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்.

டாடா மிரட்டப்பட்ட விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பிரதமருக்கு நன்கு தெரியும். அவர் நியாயமாக நடந்து கொள்வார் என்றுஎதிர்பார்க்கிறேன்.

அந்த மந்திரியை இலாகாவில் இருந்து மட்டுமல்ல, அமைச்சரவையிலிருந்தே நீக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் அமைச்சரவையில் நேர்மைஇல்லை என்று நான் குற்றம் சாட்ட நேரிடும் என்றார் வைகோ.

திமுக நிலைமை மோசமாகிறது: சம்பத்

இதற்கிடையே மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தொண்டாமுத்தூர் தொகுதி மதிமுக வேட்பாளர் கண்ணப்பனை ஆதரித்து பிரசாரம்செய்கையில்,

தமிழ்நாட்டில் 56 லட்சம் இளம் பெண்கள் திருமணத்திற்காக காத்துள்ளனர். இவர்களுக்கு அரை பவுன் இலவசத் தாலி தருவதாக அம்மா அறிவித்துள்ளார்.அந்த தங்க மனசு உங்களுக்கு வருமா? சேர்த்த சொத்தை பாதுகாக்க அல்லவா உங்களுக்கு அரசாட்சி தேவைப்படுகிறது?

தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரசாரங்கள் உச்சகட்டததை எட்டியுள்ளது. திமுக நிலைமை மோசமாகி வருகிறது. பறவைக் காய்ச்சல் கண்டகோழிப்பண்ணை போல உள்ளது திமுக.

திமுகவில் அடுத்த முதல்வர் ஸ்டாலினா, தயாநிதி மாறனா என்ற போட்டி நடந்து வருகிறது. அடிதடி நடக்காதது ஒன்றுதான் பாக்கி. திமுக தற்போதுகோமாவில் உள்ளது. சன் டிவி மட்டும் இல்லாமல் இருந்தால் பாடையில் ஏற்றி பாலூற்றியிருப்பார்கள் என்றார் சம்பத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+