தேமுதிக வேட்பாளருக்கு கொலை மிரட்டல்!
சென்னை:
அடையாளம் தெரியாத சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் தனக்கும்தனது கட்சியினருக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரி சென்னைமாநகர காவல்துறை ஆணையரிடம் நடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்குதிராவிட கழக வேட்பாளர் வழக்கறிஞர் சிவா புகார் கொடுத்துள்ளார்.
திருவல்லிக்கேணி தொகுதியில் விஜயகாந்த் கட்சி சார்பில் போட்டியிடுபவர்வழக்கறிஞர் சிவா என்கிற சிவக்குமார். இவர் மாநகர காவல்துறை ஆணையர் லத்திகாசரணிடம் கொடுத்த புகாரில், நானும், எனது கட்சியினரும் பிரசாரத்தை முடித்து விட்டுஅவ்வை சண்முகம் சாலையில் வந்து கொண்டிருந்தோம். அங்கு ஒரு ஹோட்டலில்காபி குடிக்க நின்றோம். அப்போது என்னுடைய ஜீப் அருகே 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்து மிரட்டினர்.ஒழுங்காக பிரசாரத்தை நிறுத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் போட்டுத் தள்ளிவிடுவோம் என்று அந்த இரண்டு பேரும் மிரட்டினர். என்னையும், ஆட்டோ டிரைவர்சரவணன், ஜீப்பை ஓட்டி வந்த எனது நண்பர் சுனில் உள்ளிட்டோர் இந்த மிரட்டலுக்குஆளாகினர்.
என்னையும், எனது கட்சியினரையும் கொலை மிரட்டல் விடுத்துப் பேசியவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், எனது கட்சியினருக்கும் உரியபோலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
விஜயகாந்த்துக்கு போலீஸ் தடை:
இதற்கிடையே விருத்தாச்சலம் தொகுதியில் ஒரே நேரத்தில் பாமக நிறுவனர்ராமதாஸும், அத்தொகுதியில் போட்டியிடும் நகர் விஜயகாந்த்தும் பிரசாரம்செய்ததால் பரபரப்பு நிலவியது.
ராமதாஸ் வருகையை காரணம் காட்டி 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம்செய்ய விஜயகாந்த்தை போலீஸார் அனுமதிக்கவில்லை.
தேமுதிக தலைவரும், விருத்தாச்சலம் தொகுதி வேட்பாளருமான விஜயகாந்த், தனதுதொகுதியில் 45க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிரப் பிரசாரம் செய்யதிட்டமிட்டிருந்தார்.
இதற்காக முன் கூட்டியே அனுமதியும் வாங்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், விருத்தாச்சலத்திலும் அதைத் தொடர்ந்துவிருத்தாச்சலம்-நெய்வேலி மெயின் ரோட்டில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசவும்அங்கு வந்திருந்தார்.
இதனால் விருத்தாச்சலம்-நெய்வேலி சாலையில் உள்ள 18க்கும் மேற்பட்டகிராமங்களில் பிரசாரம் செய்ய விஜயகாந்த்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து 27 கிராமங்களில் மட்டும் விஜயகாந்த் பிரசாரம் செய்து பேசினார்.ராமதாஸ், விஜயகாந்த் அடுத்தடுத்து தொகுதிக்குள் வலம் வந்ததால் விருத்தாச்சலம்தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் பதட்டம் ஏற்பட்டது.
போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications