நெப்போலியனின் ஆன்லைன் ஓட்டு வேட்டை!
சென்னை:
மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் நெப்போலியன், தனி இணைய தளம்உருவாக்கி அதன் அதன் மூலமும் ஓட்டு வேட்டையாடி வருகிறார்.
திமுக சார்பில் மைலாப்பூர் தொகுதியில் நடிகர் நெப்போலியன் களம் கண்டுள்ளார்.அதிமுக சார்பில் நாடக காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் நிற்கிறார்.இருவருமே மிகக் கடுமையாக பிரசாரம் செய்து வருகிறார்கள். தனது செல்போன்எண்ணை வாக்காளர்களிடம் தெரிவித்து, எதுவாக இருந்தாலும், எந்த நேரமாகஇருந்தாலும் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி ஓட்டு வேட்டையாடிவருகிறார் எஸ்.வி.சேகர்.
அவ்வப்போது வேனில் ரோஸ் மில்க் கொண்டு வந்து தெரு முனையில் நின்றுபோவோர் வருவோருக்கெல்லாம் ஊற்றித் தருகிறார் சேகர்.
அதை அப் பகுதி சிறுவர்கள் பாட்டில்களில் வாங்கிப் போகின்றனர். அதை பாட்டிலில்ஊற்றித் தருவதும் எஸ்.வி.சேகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நெப்போலியன் இன்னும் ஒரு படி மேலே போய், தனி இணையதளம் அமைத்துஅதன் மூலம் வாக்கு சேகரித்து வருகிறார்.
http://www.iamformylapore.com என்ற இந்த இணைய தளத்தில் மையிலாப்பூர் தொகுதிகுறித்த அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன. தொகுதியில் உள்ள கல்விநிலையங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், முக்கியஇடங்கள், வணிக வளாகங்கள் குறித்த விவரங்கள், ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட
பல்வேறு தகவல்கள் உள்ளன.
இதுதவிர நெப்போலியன் குறித்த தகவல்களும் தனியாக உள்ளன. தனது திரைப்படமற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த முழு விவரங்களையும் நெப்போலியன் இதில்தொகுத்துள்ளார்.
நெப்போலியனைத் தொடர்பு கொள்ள அவரது தொலைபேசி எண்கள், வீட்டு முகவரி,இணையத் தள முகவரி உள்ளிட்டையும் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர நெப்போலியன் நடத்தி வரும் கடல் உணவு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறுநிறுவனங்கள் குறித்த விவரங்களும் இதில் அடங்கியுள்ளன.
இந்த இணையத் தளத்தை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications