திமுகவில் இணைந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் கார்த்திக் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சியின் வேட்பாளர்களைஅதிமுகவினர் தொடர்ந்து வளைத்து வரும் நிலையில் தற்போது திமுகவில் ஒருபார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் இணைந்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் சேர கார்த்திக் முயன்று வந்தார். ஆனால் ஆரம்பத்தில் அதிமுகஅவரைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் முக்குலத்தோர் வாக்குகளை கார்த்திக்கடுமையாக பிரிப்பார் என உளவுத்துறை தகவல் தந்ததையடுத்து அவரைகூட்டணியில் சேர்க்க அதிமுக கடும் முயற்சி எடுத்தது.

ஆனால் கார்த்திக் அதைக் கண்டுகொள்ளவில்லை.

இதனால் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிமுக தரப்பு, பார்வர்ட் பிளாக் கட்சிவேட்பாளர்களை வளைத்தது. அதிமுகவின் முயற்சியால் பல பார்வர்ட் பிளாக்வேட்பாளர்கள் அதிமுகவுக்குத் தாவினர். போட்டியிலிருந்தும் விலகினர்.

மேலும், தங்களது வழிக்கு வராத வேட்பாளர்களை மிரட்டியும், உருட்டியும்காரியத்தை சாதித்து வருகின்றனர் அதிமுகவினர்.

அவர்களின் தொடர் மிரட்டல் காரணமாக பல வேட்பாளர்களால் பிரசாரம் செய்யக்கூட முடியவில்லை, முடங்கிக் கிடக்கின்றனர்.

இந் நிலையில் கடலூர் தொகுதி பார்வர்ட் பிளாக் வேட்பாளர் ஆறுமுகம்போட்டியிலிருந்து விலகி திமுகவில் போய் சேர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+