தங்கம் விலை குறையாது: ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
தங்கம் விலை அவ்வளவு சீக்கிரத்தில் குறையும் வாய்ப்பில்லை என்று மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தங்கம் விலையின் கடும் உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று முதல்வர்ஜெயலலிதா தனது பிரசாரத்தின்போது குற்றம் சாட்டியிருந்தார்.இந் நிலையில் ஹைதராபாத் நகரில் நடந்த ஆசிய வளர்ச்சி வங்கி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம்,
உலகம் முழுவதுமே தங்கத்திற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும்அதன் உபயோகம் அதிகரித்துள்ளது.
தனி நபர் வருமானம் அதிகரித்து வருகிறது. எனவே தங்கம் விலையில் உயர்வுஏற்பட்டுள்ளது. இது அவ்வளவு சீக்கிரம் குறையும் வாய்ப்பும் இல்லை என்றார்ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications