குழம்பி போயிருக்கிறார் கருணாநிதி-இல.கணேசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாஜக கூட்டணியிலிருந்து ஏன் விலகினோம் என்பதற்கு திமுக தலைவர் கருணாநதிஅவ்வப்போது ஒரு காரணத்தை சொல்லி வருகிறார்.

இதன் மூலம் அவர் கடுமையாக குழம்பிப் போயிருப்பது தெரிகிறது என்று பாஜகதேசிய துணைத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

ராஜாவுக்கு கேபினட் அமைச்சர் பதவி கொடுக்காத காரணத்தால்தான் பாஜககூட்டணியிலிருந்து விலகினோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து இல.கணேசன் கருத்து தெரிவிக்கையில், பாஜக கூட்டணியிலிருதுவிலகியது குறித்து ஏகப்பட்ட காரணங்களைச் சொல்லி விட்டார் கருணாநிதி.இப்போது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். இவற்றையெல்லாம்தொகுத்தால் பெரிய புத்தகமே போடலாம்.

கூட்டணியிலிருந்து ஏன விலகினோம் என்று அவருக்கே தெளிவாகத் தெரியவில்லை.அந்த அளவுக்குக் குழம்பிப் போயிருக்கிறார் கருணாநிதி என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

பாஜக கூட்டணியில் இருந்தபோதே வேறு அணிக்குப் போகும் முயற்சியில் திமுகஈடுபட்டது. தாங்கள் அங்கம் வகித்த அரசுக்கு எதிராகவே அவர்கள் போராட்டத்திலும்ஈடுபட்டார்கள். வித்தியாசமான அரசியலை நடத்தினார்கள்.

சிறுபான்மையினர் ஓட்டுக்களைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் பாஜககூடடணியிலிருந்து திமுக வெளியேறியது என்பதே எனக்குத் தெரிந்த உண்மை. இதைகருணாநிதி பகிரஙகமாக ஒத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்தால் நான் பாராட்டுவேன். அதை விடுத்து தினசரி ஒரு பொய்யானகாரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார் கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+