பாஜகவின் கல்யாண, கிரிக்கெட் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்சதீஷ்குமார் செய்து வரும் பிரசாரம் தொகுதியையே கலக்கி வருகிறது.

தேர்தல் நேரங்களில் வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவருவதற்கு, பல்வேறு நூதனவழிகளைக் கடைப்பிடிப்பது வழக்கம். இந்தத் தேர்தலிலும் அந்தக் கூத்து நீக்கமறநிறைந்திருக்கிறது.

திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சதீஷ்குமார்ஓட்டுவேட்டையில் அசத்தி வருகிறார்.

திருவல்லிக்கேணி தொகுதியில் பல மீனவர் குப்பங்கள் உள்ளன. இந்தக் குப்பங்களில்புகுந்து புகுந்து ஓட்டு வேட்டையாடி அவர் அத்தோடு நிற்காமல் படகில் ஏறிகடலுக்குள்ளும் சென்றார்.

அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் வாக்கு சேகரித்து அத்தனைபேரையும் அசத்தினார்.

மேலும், சென்னைக்கு பிரசாரம் செய்ய வந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜகஎம்.பியுமான சித்துவை மெரீனா கடற்கரைக்கு அழைத்துச் சென்று அவரைமீனவர்களோடு கிரிக்கெட் விளையாட விட்டும் வாக்கு சேகரித்தார்.

இப்போது இன்னொரு அசத்தல் வழியை பின்பற்றி வருகிறார். திருமண அழைப்பிதழ்போல அச்சடித்து அதை வீடு வீடாகச் சென்று கொடுத்து வாக்கு வேட்டையாடுகிறார்.

இந்த அழைப்பிதழை இன்று காலை திருவல்லிக்கேணி பார்த்ததசாரதி கோவிலுக்குகொண்டு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் பட்டுப் புடவை அணிந்தமகளிர் அணியினர் புடை சூழ வீடு வீடாக சென்று அழைப்பிதழ், குங்குமம், கொடுத்துவாக்கு சேகரித்தார்.

சதீஷ்குமார் அடித்த நூதன தேர்தல் திருமண அழைப்பிதழ் இதுதான்:

சென்னை-5, திருவல்லிக்கேணி தொகுதியில் குடியிருக்கும் (லேட்) ஜன சங்கத்தின்பெளத்திரனும், பாஜகவின் செல்லப் பிள்ளையுமான திருநிறைச் செல்வன்எஸ்.சதீஷ்குமார் எம்.ஏ. என்கிற வேட்பாளருக்கும்,

பெருமைமிகு திரு. தமிழ்நாட்டின் பெளத்திரியும், திரு. சென்னையின் மூத்த குமாரத்திதிருநிறைச் செல்வி திருவல்லிக்கேணி என்கிற சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல்நடத்த தேர்தல் ஆணையத்தாரால் நிச்சயித்த வண்ணம்,

தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடியில் சென்று சுற்றமும், நட்பும் சூழதாமரைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி அடையச் செய்ய வேண்டுகிறோம்.

இங்ஙனம், தேர்தல் பணிக்குழு, பாஜக, திருவல்லிக்கேணி என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.

இவருக்கு மக்கள் அட்சதைப் போடப் போகிறார்களா அல்லது வேறு எதையாவதுபோடப் போகிறார்களா என்பது 11ம் தேதி தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+