அதிமுகவுக்காக பணம் வினியோகித்த விஏஓ கைது
சிதம்பரம்:
சிதம்பரத்தில் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கோரி மக்களுக்கு பணம் வினியோகித்த கிராம நிர்வாக அதிகாரி(விஏஓ) கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் அருகே கவலக்குடியில் இச் சம்பவம் நடந்தது. நேரடியாகப் பணம் தந்தால் மாட்டிக் கொள்ளவாய்ப்பிருப்பதால் வி.ஏ.ஓ. குளஞ்சிநாதன் மூலமாக அதிமுகவினர் பணத்தை வினியோகித்தனர்.இதை பாமகவினர் கண்டுபிடித்து தேர்தல் பார்வையாளரிடம் புகார் கூறினர். இதையடுத்து உயர் அதிகாரிகள்அங்கு விரைந்து சென்றபோது வீடு வீடாக பணம் கொடுத்துக் கொண்டிருந்த விஏஓ கையும் களவுமாகப்பிடிபட்டார்.
பெரும் பணத்துடன் அதிமுக ஸ்லிப்புகளுடன் பிடிபட்ட அவரை அந்த இடத்திலேயே சஸ்பெண்ட் செய்துஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர் கைதும் செய்யப்பட்டார்.
கடைசி நேரத்தில் ஆளும் தரப்பு பெரும் அளவில் பணத்தை இறக்கவுள்ளதாக செய்திகள் வருவதால் எதிர்க்கட்சியினர் இரவு பகலாக தூங்காமல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெ விதிமீறல்-ஆணையம் நோட்டீஸ்:
இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரத்தின்போது தேர்தல் விதியை மீறி அதிக அளவில் அரசு வாகனங்கள்பயன்படுத்தப்பட்டது குறித்து அதிமுக மற்றும் தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு கூறிதேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 2ம் தேதி கிருஷ்ணகிரியில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் பிரசாரத்தை முழுமையாகப்பார்வையிட்டு ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பாக அதிக அளவிலான அரசு வாகனங்கள்ஜெயலலிதாவின் வேனை பின் தொடர்ந்தன. மொத்தம் 80 வாகனங்கள்ஜெயலலிதாவின் வேனை பின் தொடர்ந்து வந்தன.
இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பினார் பார்வையாளர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தமிழக அரசுக்கும், அதிமுகவுக்கும் தேர்தல்ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளைக்குள் பதில் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விதிமீறல் குறித்து தேர்தல் ஆணைய வீடியோ கிராபர் படம் எடுத்தபோது அதைஜெயலலிதாவுடன் உடன் சபாரி ஆசாமிகள் (கருப்புப் பூனைப் படையினர் அல்ல)தடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது நினைவுகூறத்தக்கது.
தயாநிதிக்கும் நோட்டீஸ்:
அதே போல பிரச்சாரத்தில் அதிகமான வாகனங்களைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்றுமாலைக்குள் விளக்கம் தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தயாநிதின் காருக்குபின்னால் 34 வாகனங்கள் வந்தன.
மேலும் சென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது அதிகமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்துதிமுக கூட்டணி தந்த விளக்கத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications