ஜூவி-நக்கீரன்-ரிப்போர்டர்: திமுகவே வெல்லும் தினமலர்-தென் மாவட்டங்களில் அதிமுக முன்னிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் மற்றும் நக்கீரன்ஆகிய வார இதழ்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதில் ஜூனியர் விகடனும் நக்கீரனும் 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பை நடத்தின. குமுதம் ரிப்போர்டர்இதழ் மாநிலத்தின் முக்கிய நகர்களில் பஸ் நிலையங்களில் கருத்துக் கணிப்பை நடத்தி இந்த முடிவைவெளியிட்டுள்ளது.

ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பு:

ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணிக்கு 56 சதவீதமும் அதிமுககூட்டணிக்கு 41 சதவீதமும் ஆதரவு நிலவுகிறது.

திமுகவுக்கு 117:

தொகுதிவாரியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி திமுகவுக்கு 117 இடங்கள் கிடைக்கும். (தனித்துஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை).

காங்-44, பாமக-27:

காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும், பாமகவுக்கு 27 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 இடங்களிலும் வெற்றி கிடைக்கும்.

அதிமுகவுக்கு 22, மதிமுகவுக்கு 4:

அதே நேரத்தில் அதிமுகவுக்கு 22 இடங்களே கிடைக்கும். அதனுடன் கூட்டணி அமைத்துள்ள மதிமுகவுக்கு 4இடங்களில் வெற்றி காத்திருக்கிறது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

விஜய்காந்துக்கு முட்டை:

அதே போல விஜய்காந்தின் தேமுதிகவுக்கும் ஒரு இடத்திலும் வெற்றி கிடைக்காது.

பாஜகவுக்கு ஓரு இடம்:

ஆனால், பாஜக ஒரு இடத்தில் வெல்லும்.

இவ்வாறு ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

நக்கீரன் கருத்துக் கணிப்பு:

நக்கீரன் மூன்று கட்டமாக (தலா 80 தொகுதிகளாக) கருத்துக் கணிப்பை தனது மூன்று இதழ்களில் வெளியிட்டது.

அதன் முதல் இரண்டு கட்ட கருத்துக் கணிப்பில் மொத்தம் 160 இடங்களுக்கான முடிவுகள் வெளியாயின. அதில் திமுக கூட்டணி 139 இடங்களிலும் அதிமுககூட்டணி 19 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடைசி 74 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகளையும் நக்கீரன் வெளியிட்டுள்ளது. மொத்தம் 234 தொகுதிகளுக்கும் நக்கீரன்வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின் விவரம்:

திமுகவுக்கு 124:

திமுக கூட்டணியில் திமுகவுக்கு தனியாக 124 இடங்களில் வெற்றி கிடைக்கும். இதனால் தனியாகவே அந்தக் கட்சியால் ஆட்சியமைக்க முடியும்.

காங்-43, பாமக-21:

காங்கிரஸ் கட்சிக்கு 43 இடங்களும், பாமகவுக்கு 21 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7இடங்களிலும் வெற்றி கிடைக்கும்.

மொத்தம் 207 இடங்களில் இந்தக் கூட்டணி வெற்றி பெறும்.

அதிமுகவுக்கு 21:

அதிமுகவுக்கு 21 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

மதிமுகவுக்கு 3, விசிக்கு 1:

மதிமுகவுக்கு 3 இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு இடத்தில் வெற்றி கிடைக்கும்.

விஜய்காந்த் வெல்வார்:

அதே போல விருத்தாசலத்தில் விஜய்காந்துக்கு வெற்றி கிடைக்கும். மேலும் சுயேச்சை ஒருவரும் வெல்லப் போகிறார்.

இவ்வாறு நக்கீரன் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

குமுதம் ரிப்போர்டர்:

குமுதம் ரிப்போர்டர் வார இதழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம்,வேலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், சிதம்பரம், விழுப்புரம் ஆகிய ஊர்களின் பஸ்நிலையங்களில் வயது வித்தியாசமின்றி 50 பெண்கள், 50 ஆண்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

அதில், திமுக கூட்டணிக்கு வாக்களிக்கப் போவதாக 46.6 சதவீதத்தினரும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பப் போவதாக 38.4 சதவீதத்தினரும்பதிலளித்துள்ளனர்.

பிற கட்சிகளுக்கு வாக்களிக்கப் போவதாக 15 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

ஆனந்த விகடன்:

அதே போல கடந்த மக்களவைத் தேர்தலில் ஆனந்த விகடன் நடத்திய யாருக்கு எத்தனை இடம் போட்டியில் பங்கேற்று, 40 இடங்களில் திமுக கூட்டணியேவெல்லும் என்று கூறி போட்டியில் வென்ற 19 பேரில 15 பேரிடம் இந்த முறை கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.

அவர்கள் கூறியுள்ள கருத்தின்படி, திமுக கூட்டணி 200 முதல் 226 இடங்களில் வெல்லும். அதிமுக 8 முதல் 30 இடங்களில் வெல்லும் என்று அவர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.

விஜய்காந்த், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு இடமும் கிடைக்காது என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவே முன்னிலை: தினமலர் கருத்துக் கணிப்பு

இதற்கிடையே மதுரை , திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஏழு சட்டசபைத் தொகுதிகளில்தினமலர் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.

மதுரை மத்தி, சேடபட்டி, ஆத்தூர், ஆண்டிபட்டி, பரமக்குடி, சிவகங்கை, சிவகாசி ஆகியவை தான் அந்தத் தொகுதிகள்.

இதில் அதிமுகவுக்கு 43.5 சதவீத ஆதரவும், திமுகவுக்கு 39.9 சதவீத ஆதரவும், விஜயகாந்துக்கு 14.5 சதவீத ஆதரவும் பாஜகவுக்கும் மற்றகட்சிகளுக்கு 2.1 சதவீத ஆதரவும் உள்ளது தெரிய வந்துள்ளதாக தினமலர் கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் தென் மாவட்டங்களில் அதிமுவே அதிக இடங்களைப் பிடிக்கும் என தினமலர் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+