கேப்டனுக்கு முரசு கொட்டும் விஜய், ராஜ் டிவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக, அதிமுகவுக்கு தொலைக்காட்சிகளின் ஆதரவு மிக பலமாக உள்ள நிலையில்நடிகர் விஜயகாந்த்துக்கு விஜய் டிவியும், ராஜ் டிவியும் பக்க பலமாக இருந்துவருகின்றன.

இப்போதெல்லாம் டிவிதான் முக்கிய பிரசார பீரங்கியாக மாறியுள்ளது.

திமுகவுக்கு சன் டிவி உள்ளது, அதிமுகவுக்கு ஜெயா டிவி. மற்ற கட்சியினர் நிலைதான்மகா மோசம்.

குறிப்பாக விஜயகாந்த் என்ன செய்கிறார் என்பதை பத்திரிகைகளைப் பார்த்தால்தான்தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதிமுகவை ஆதரிக்கும் பத்திரிக்கைகளிலும்திமுகவை ஆதரிக்கும் பத்திரிக்கைகளிலும் விஜயகாந்த் என்ற பெயர் இருட்டடிப்புசெய்யப்பட்டு விடுகிறது.

அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் மட்டுமே நியூஸ் போடுகிறார்கள்.

சன் டிவியும், ஜெயா டிவியும் திமுக, அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும்நிலையில் விஜயகாந்த் தனது கட்சியின் சின்னத்தைப் பிரபலப்படுத்த ராஜ் மற்றும்விஜய் டிவியை நாடியுள்ளார்.

இரு தொலைக்காட்சிகளும் இப்போது விஜயகாந்த் கட்சியின் முரசு சின்னம் குறித்தவிளம்பரத்தை அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒளிபரப்பி கேப்டன் கட்சிக்கு பலம்சேர்த்து வருகின்றன.

ராஜ் டிவியின் நியூஸ் டைம் நிகழ்ச்சியிலும் அன்றாடம் விஜயகாந்த் செய்து வரும்பிரசாரங்களை ஒளிபரப்புகிறார்கள்.

ஜெயா டிவியில் வைகோவுக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்தாலும், விண் டிவியும்வைகோவின் பேச்சை பல பாகங்களாக தினசரி ஒளிபரப்பாகி வருகிறது.

கார்த்திக்கை அவ்வப்போது சன் டிவியில் மட்டுமே கூலிங்கிளாஸ் சகிதமாகக் காணமுடிகிறது. டிவியிலும் சரி நிருபர்கள் கூட்டத்திலும் சரி பேட்டியின்போதுகேட்கப்படும் கேள்விகளுக்கு பெரும்பாலும் சம்மந்தா சம்மந்தமில்லாமல் தான் பதில்சொல்கிறார் கார்த்திக்.

அவரை பேட்டி கண்டுவிட்டு வந்தால் எதைத் தலைப்பாகப் போடுவதே என்பதேஅரை மணி டிஸ்கசனாகிவிடுகிறது நிருபர்களுக்கும் உதவி ஆசிரியர்களுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+