நான் சொல்லாததையும் செய்வேன்: ஜெ.
சென்னை:
நான் சொன்னதைச் செய்வேன். சொல்லாததையும் செய்வேன் என்று முதல்வர்ஜெயலலிதா ரஜினி ஸ்டைலில் கூறியுள்ளார்.
சென்னை நந்தனம் பகுதியில் முதல்வர் ஜெயலலிதா தனது ஒன்னரை மாத பிரசாரத்தைநிறைவு செய்தார். அப்போது அவர் பேசுகையில்,கருணாநிதிக்கு வாக்குறுதிகளை சொல்ல மட்டுமே தெரியும். ஆனால் அவற்றை அவர்நிறைவேற்ற மாட்டார்.
வீராணம் தண்ணீர் தருவதாகச் சொன்னார். கொடுத்தாரா? ஒரு முறை, இருமுறைஅல்ல நான்கு முறை முதல்வராக இருந்துள்ளார். ஆனால் கடைசி வரை ஒரு சொட்டுத்தண்ணீரைக் கூட அவரால் கொடுக்க முடியவில்லை.
ஆனால் நான் சொன்நேன், செய்து காட்டினேன். நான் ஒன்றை சொல்லி விட்டால்அதை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற முயலுவேன். சொன்னதைச் செய்வேன்சொல்லாததையும் செய்வேன்.
மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் தருவேன் என்று நான் சொன்னேனா?இல்லை. ஆனால் இன்று தமிழகத்தில் உள்ள அத்தனை மாணவ, மாணவியருக்கும்சைக்கிள் வழங்கியுள்ளேன்.
கலர் டிவி, கிலோ அரிசி 2 ரூபாய், காஸ் அடுப்பு என ஏகப்பட்ட வாக்குறுதிகளைஅறிவித்தார் கருணாநிதி. ஆனால் இப்போது, இந்தத் திட்டங்களையெல்லாம்நிறைவேற்ற மத்திய அரசு மனது வைக்க வேண்டும். பிரதமரிடம் போராடி உதவிகேட்டு இவற்றை வழங்குவேன் என்கிறார்.
இன்னும் ஜெயிக்கவே இல்லை. அதற்குள் தான் கொடுத்துள்ள நிறைவேற்ற முடியாதவாக்குறுதிகளுக்கு, அடுத்தவர்கள் மீது பழியைப் போட்டு விட்டுத் தப்பிக்கபார்க்கிறார் கருணாநிதி.
நான் பிள்ளைக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து கொடுக்கும் தாய்போல,யாருடைய உதவியும் இல்லாமல் எனது சொந்த பலத்திலேயே வழங்குவேன்என்றார் ஜெயலலிதா.
விதியை மீறவில்லை: ஜெ
இதற்கிடையே கிருஷ்ணகிரி தேர்தல் பிரசாரத்தின்போது விதி மீறலில் ஈடுபடவில்லைஎன்று ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டபோது, விதிமுறைகளுக்குப்புறம்பாக ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. பல அரசு வாகனங்களும்பிரசார ஊர்வலத்தில் சென்றன.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கும், அதிமுகவுக்கும்தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் ஜெயலலிதாதனது விளக்கத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார்.
அதில், தனது பிரசாரத்தில் 3 வாகனங்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும், மற்றவாகனங்களுக்கும், தனது கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. எனவே விதி மீறலில் நான்ஈடுபடவில்லை என்று ஜெயலலிதா அனுப்பிய பதிலில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications