ஸ்டாலினை குறி வைக்கும் அதிமுக: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்டாலினை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதிமுகவினர்ஆயிரம் விளக்கு தொகுதியை குறி வைத்து செயல்பட்டு வருகின்றனர். எனவேதிமுகவினர் உஷாராக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

தேனாம்பேட்டையில், ஸ்டாலினை ஆதரித்து நேற்று நடந்த கூட்டத்தில் கருணாநிதிபேசுகையில்,

தம்பி ஸ்டாலின் தற்போது விழுப்புரம், செஞ்சி பகுதியில் பிரசாரம்மேற்கோண்டுள்ளார். எனவே நான் இங்கே பிரசாரத்தை முடித்து வைக்க வந்துள்ளேன்.

இறுதி நாளில் கூட தனது தொகுதியில் பிரசாரம் செய்யாமல் மற்ற தொகுதிகளில்ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். என்னைப் போல அடுத்தவர் வெற்றிக்காகபாடுபடுகிறார் ஸ்டாலின். அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார்.

நீங்கள் அனைவரும் சேர்ந்து அவரை வெற்றி பெறச் செய்வீர்கள் என்றநம்பிக்கையில்தான் அவர் அங்கு சென்றுள்ளார். எனவே ஆயிரம் விளக்கைக்காப்பாற்ற வேண்டியது உங்களது பொறுப்பு.

இத்தொகுதியை அதிமுகவினர் குறி வைத்துள்ளனர். ஸ்டாலினை வீழ்த்த வேண்டும்என்று வியூகம் வகுத்துள்ளனர். ஆனால் சென்னை திமுகவின் கோட்டை. இந்தமுறையும் அது நிரூபிக்கப்பட வேண்டும்.

மிகுந்த உஷாராக இருந்து ஆளும் கட்சியினரின் தகிடுதித்தங்களை எல்லாவகையிலும் சமாளித்து, ஆயிரம் விளக்கில் ஸ்டாலினை வெற்றி பெற வைக்கவேண்டும் என்றார் கருணாநிதி.

விதியை மீறவில்லை: தயாநிதி

இதற்கிடையே தேர்தல் விதிமுறையை மீறும் வகையில் அதிக வாகனங்களுடன்பிரசாரம் செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் பிரசாரத்தில் ஈடுபடும்போதுபாதுகாப்பு வீரர்களின் வாகனம் உள்பட மொத்தம் 3 வாகனங்கள்தான் என்னுடன்வந்தன.

முக்கிய சாலைகளில் பிரசாரம் செய்தபோது, ஆங்காங்கே சாலைகளில் வந்தவாகனங்கள் எனது வாகன வரிசையில் சேர்ந்திருக்கும். அல்லது எனது பேச்சைக்கேட்பதற்காக திமுகவினர் அவர்களது வாகனங்களை எனது வாகன வரிசையில்நிறுத்தியிருக்கலாம்.

எனவே தேர்தல் விதிமுறைகளை மீறி நான் 34 வாகனங்களில் வந்ததாக கூறப்படும்செய்தி தவறானது, உண்மைக்கு மாறானது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+