புதுவையிலும் கலர் டிவி: காங். அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாககலர் டிவி தரப்படும் என்று அம்மாநில காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமிஅறிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கு கலர் டிவி தரப் போவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி புதுவையிலும் இத்திட்டத்தைஅறிவித்துள்ளார் ரங்கசாமி.

புதுவையில் தான் போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் இறுதிக் கட்டபிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ரங்கசாமி பேசுகையில்,

புதுவையில் சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் வைத்துள்ள அனைவருக்கும் 21 இஞ்ச்கலர் டிவி இலவசமாக வழங்கப்படும்.

மேலும் 10 கிலோ இலவச அரிசி, கல் வீடு திட்டத்தின் கீழ் ரூ. 1லட்சம் நிதியுதவி,மாணவர்களுக்கு 100 சதவீத கல்விக் கட்டண சலுகை உள்ளிட்டவை வழங்கப்படும்.

குடிசைப் பள்ளிகளை கல் கட்டிடமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது காங்கிரஸ்அரசு. காங்கிரஸ் ஆட்சியில் புதுவை மக்கள் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும்வாழ்ந்து வருகிறார்கள் என்றார் ரங்கசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+