வாக்களித்தார் ஜெ: கருத்து சொல்ல மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலலிதா தனது தோழி சசிகலாவுடன் வந்து வாக்களித்தார்
![]() |
போயஸ் கார்டனுக்கு அருகே உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அவர் வாக்களித்தார். வாக்களித்த பின்நிருபர்கள் அவரை சூழ்ந்தனர்.
ஆனால், எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். எதை எதையெல்லாம சொல்ல வேண்டுமோஅதையெல்லாம் பிரச்சாரத்திலேயே சொல்லி விட்டேன். இப்போது ஏதும் சொல்ல விரும்பவில்லை என்றார்.
ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்களது பேவரிட்டான பச்சை கலர் சேலையில் வந்திருந்தனர்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் ஆயிரம் விளக்கு தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு அதிமுக சார்பில்ஆதி ராஜாராமும், திமுக சார்பில் ஸ்டாலினும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications