துரைமுருகன் மீது அதிமுகவினர் தாக்குதல்
காட்பாடி:
திமுக மூத்த தலைவரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனை அதிமுகவினர் தாக்கினர்.இதையடுத்து அவர் சாலை மறியலில் ஈடுபட்டார்.
காட்பாடி அருகே உள்ள நீலகண்டபாளையத்தில் வாக்குப் பதிவை பார்க்க சென்ற துரைமுருகன், அங்குநின்றிருந்த அதிமுக பிரமுகர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.இதையடுத்து அங்கு பாய்ந்த வந்த அதிமுகவினர் துரைமுருகனை சரமாரியாதத் தாக்கினர்.
இதைத் தொடர்ந்து துரைமுருகன் அந்த இடத்திலேயே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். திமுகதொண்டர்களும் பெருமளவில் கூடியதையடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றுவிட்டனர்.
இச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேமுதி வேட்பாளர் மீது திமுக தாக்குதல்:
இதே போல சேலத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் தனசேகரன் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.
சேலம் 1 தொகுதியில் போட்டியிடும் தனசேகரன் கிச்சிபாளையம் அருகே காரில் வந்து கொண்டிருந்த போது திமுகவினர் வழிமறித்து தாக்கினர்.
இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன. தனசேகரரும் காயமடைந்தார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications