திமுக கூட்டணி வெல்லும்-ஸ்டார் எக்சிட் போல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 175 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் எனஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.
தமிழக சட்டசபையின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது.ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த வாக்காளர்களிடம் ஸ்டார் நியூஸ்தொலைக்காட்சி நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளை அந்த தொலைக்காட்சிவெளியிட்டுள்ளது.
அதன்படி திமுக அணிக்கு 48.5 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதிமுகஅணிக்கு 37.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
இதன்படி திமுக அணிக்கு 175 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் திமுகவுக்குதனிப் பெரும்பான்மை பலம் (118 இடங்கள் வரை) கிடைக்கும் என்றும் ஸ்டார் நியூஸ்தொலைக்காட்சி தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications