பல இடங்களில் வாக்கு பதிவு எந்திரங்களில் கோளாறு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை வில்லிவாக்கம், அச்சரப்பப்பாக்கம், கோபாலபுரம், பென்னேரி, திருவல்லிக்கேணி மற்றும் கோவை,சூலூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், தூத்துக்குடி, இரணியல், ஆரணி, உசிலம்பட்டி உள்ளிட்ட பல தொகுதிகளின்வாக்குச் சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

இதனால் இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தாமதமாகத் துவங்கியது.

திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளியில் ஓட்டுபோட்டார்.

கருணாநிதி வாக்களித்த அந்த வாக்குச் சாவடியில் மின்னணு இயந்திரம் பழுதடைந்து பின்னர் சரிசெய்யப்பட்டது. அதே போல வில்லிவாக்கம் பத்ம சாரங்கபாணி பள்ளியின் வாக்குப் பதிவு இயந்திரத்திலும்கோளாறு ஏற்பட்டதால் 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கவில்லை.

கோளாறு சரி செய்யப்பட்டு 8 மணிக்கே வாக்குப் பதிவு தொடங்கியது. திருவல்லிக்கேணியில் 3 வாக்குப் பதிவுஇயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

அச்சரப்பாக்கம் தொகுதியில் இரு இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதைபொறியாளர்களால் சரி செய்ய முடியாததால் மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு ஒன்றரை மணி நேரம்தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.

அதே போல கோவை பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சிப் பள்ளியிலும், சூலூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரச்சனை உருவானது.

நாகர்கோவில் டதி பள்ளியிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாரால் 20 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இரணியலும் இயந்திரத்தில் சிக்கல் ஏற்பட்டது.

தூத்துக்குடி கால்ட்வெல் பள்ளியில் வாக்குப் பதிவு எந்திரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் வாக்களிக்க வந்தமாவட்ட கலெக்டர் சந்திரசேகரன் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றார். பின்னர் கோளாறு சீர் செய்யப்பட்டது.

இதே போன்ற நிலையில் தான் ஆரணி, பொன்னேரியிலும் ஏற்பட்டது. அங்கு 3 இடங்களில் மாற்று எந்திரங்கள்வரவழைக்கப்பட்டு தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.

உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்திலும் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு செய்ததால் அதை சீர் செய்துதாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.

தேர்தல் ஊழியர்கள் இடமாற்றம்:

இந் நிலையில் கோவை தொண்டாமுத்தூர் மற்றும் மேற்கு தொகுதியில் பணியாற்றிய தேர்தல் ஊழியர்கள் கட்சிகளுக்கு பிரசாரம் செய்யும் வகையில் நடந்துகொண்டதால் உடனடியாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+