மதிமுக நீக்கமா?: காங்கிரஸா கொக்கா
டெல்லி:
திமுக தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மதிமுகவை ஐக்கியமுற்போக்குக் கூட்டணியிலிருந்து நீக்குவது குறித்து ஓரிரு நாட்களில் விவரமாகத்தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுகவுடன் கூட்டணி வைத்தது மதிமுக. இதனால்அக்கட்சியை மத்திய கூட்டணியிலிருந்தும் நீக்க வேண்டும். மதிமுக மத்தியில்நீடித்தால், நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று திமுக தலைவர்கருணாநிதி முதலில் திருச்சியிலும், சில நாட்களுக்கு முன் சென்னையிலும் கூறினார்.தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புகள்பிரகாசமாக இருப்பதாக செய்திகள் பரவியுள்ள நிலையில் உங்களது கோரிக்கைகுறித்து காங்கிரஸ் கட்சியின் பதில் என்ன என்று கருணாநிதியிடம் செய்தியாளர்கள்கேட்டபோது,
மதிமுக குறித்து அவர்களுக்கே தெரியும். எனவே அந்தக் கோரிக்கையை மீண்டும்வலியுறுத்தத் தேவையில்லை என்று நினைக்கிறேன் என பொத்தாம் பொதுவாககூறினார்.
இதற்கிடையே கருணாநிதியின் கோரிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் கூறுகையில்,
இந்த விஷயத்தில் சில நாட்கள் பொறுத்திருந்து முடிவெடுப்போம் என்றார்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 11ம் தேதி வெளியாகும் நிலையில் முடிவுகளைப்பார்த்து விட்டு மதிமுக குறித்து முடிவெடுக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாகத்தெரிகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்குதிமுக தள்ளப்பட்டால் வைகோ தப்புவார் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் வைகோவைகாங்கிரஸ் விரட்டிவிடும் என்று தெரிகிறது.
காங்கிரஸா.. கொக்கா..